(இராஜதுரை ஹஷான்)

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் அரசாங்கத்தின் கண்காணிப்பில் தனியார்  நிறுவனமாக செயற்படுவதற்கு கூட  தகுதி கிடையாது. இப் பல்கலைக்கழகத்தை நிபந்தனைகள் அற்ற விதத்தில்  முழுமையாக அரசாங்கம் பொறுப்பேற்ற வேண்டும்  என பெரு நகர அபிவிருத்தி  மற்றும்  மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மதங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் கற்கை நிலையங்கள் ஒரு கட்டத்தில் தவறான நோக்கங்களுக்கு இட்டுச்செல்லும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில்  இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.