சவூதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது மரண தண்டனை புனித ரம்ழான் பண்டிகை முடிந்த பின்னர் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2 பேர் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தநிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. ஷேக் சல்மான் அல்-அவ்தாக், அவாத் அல்-குயார்னி மற்றும் அலி அல்-ஒமாரி ஆகிய 3 பேரும் அந்த நாட்டில் பிரபல அறிஞர்களாக கருதப்படுகின்றனர்.

இவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சவூதி அரேபியாவில் கடந்த 2018ஆம் ஆண்டில் மாத்திரம் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.