உலக கிண்ணப்போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிக்கர் டேவிட்வோர்னர் மற்றும்ஸ்டீவ் ஸ்மித் விளையாடவுள்ள நிலையில்  தனிப்பட்ட ரீதியில் அவர்களை கேலி செய்யவேண்டாம் என இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன்  அலி கேட்டுக்கொண்டுள்ளார்.

பந்தை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டமைக்காக தடைகளை அனுபவித்த இரு வீரர்களையும் அதனை அடிப்படையாக வைத்து இரசிகர்கள் கேலி செய்யக்கூடாது என அலி கேட்டுக்கொண்டுள்ளார்.

நீங்கள் அவர்களை கேலி செய்யவிரும்பினால் வேடிக்கையாக அதனை செய்யுங்கள் தனிப்பட்ட முறையில் எதனைசெய்யவேண்டாம் என அவர் தனது இரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 அனைவரும் தவறு செய்வது இயல்பு,நாங்கள் மனிதர்கள் எங்களிற்கு உணர்வுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள மொயீன் அலி ஸ்மித்தும் வோர்னரும் நல்லவர்கள் என்பது எனக்கு தெரியும் அவர்களை கௌரவமாக நடத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.