செப்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தவர்களில் 8 தொழிலாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட, வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மெளலவி ஐவர் உட்பட 32 பேர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்  குறித்த 32 பேரும் இன்று காலை பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த 32 பேரில் 8 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.