உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னா் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு விசேட வா்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் இன்று வரை ஒரு மாத காலம் குறித்த அவசரகால சட்டம் அமுலில் இருந்த நிலையில் அதன் காலம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் குறித்த அவரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து இன்று விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று 22 ஆம் திகதி தொடக்கம் அவரகால சட்டத்தை ஒரு மாதகாலத்திற்கு நீடித்து  விசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.