ஒஸ்டியோபொரோசிஸைத் தவிர்க்க இன்றே செயற்படுங்கள்.!

Published By: Robert

27 Apr, 2016 | 09:04 AM
image

ஒஸ்டியோபொரோசிஸைத் தவிர்க்க இன்றே செயற்படுங்கள் இன்றைய பெண்கள் அதிகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுள், ஒஸ்டியோபொரோசிஸ் முக்கியமானது. தமிழில் சொல்வதானால் எலும்புத் திறனின்மை. இன்று, 40, 50 வயதுக்கு மேற்பட்ட பலரை இந்நோய் தாக்கியிருக்கிறது. 

எலும்புகள்தான் உடல் எனும் கட்டிடத்தைத் தாங்கும் கொங்கிறீட் சுவர்கள். ஆனால் வயதாக ஆக, சரியான போஷாக்கு இன்மையால், நம் உடலைத்தாங்கவேண்டிய எலும்புகள்எனும் இந்த கொங்கிறீட்சுவர்கள், காரைச் சுவர்களாக, எளிதில் உடைந்துவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

வயதானவர்கள் தடுக்கி விழுவது இயல்பானது. அதை நாம் தடுக்க முடியாது. ஒஸ்டியோபொரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு விழும்போது, அவர்களது இடுப்பு எலும்புகள் இலகுவாக முறிந்துவிடுகின்றன. அதுநாள் வரை சுறுசுறுப்பாக இயங்கிவந்தவர்கள், ஒரே நொடியில் படுத்த படுக்கையாகிவிடுகிறார்கள். இது உயிராபத்து வரைகூடக் கொண்டு செல்லலாம். இம்மாதிரியான எலும்பு முறிவுகளுடன் வரும் வயதானவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் காணப்படும் பட்சத்தில், அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதென்பது மிக மிகச்சிரமமாகிவிடுகிறது.

ஆனால், இதை ஆரம்பம் முதலே தடுக்கலாம். கல்ஷியம் எலும்புகளை வலுப்படுத்தும் ஒரு பிரதான சத்துப்பொருள். கல்ஷியம் நிறைந்த உணவுப்பொருட்கள், கல்ஷியம் மாத்திரைகள் என்பவற்றை முறையாக எடுத்துக்கொள்ளவேண்டும். விற்றமின் ‘டி’யும் எலும்புகளுக்கு வலுச் சேர்க்கும். இது சூரிய ஒளியில் நிரம்ப உண்டு. எம் போன்ற ஆசிய நாட்டவர்களுக்கு சூரிய ஒளி மிகத் தாராளமாகக் கிடைக்கிறது. ஆயினும், நாம் வெயிலுக்குப் பயந்து வெளியில் செல்வதில்லை அல்லது குடையைப் பிடித்துக்கொண்டே வெளியில் செல்கிறோம். ஆயினும் நமது இறையியல் கலாச்சாரத்தில் சூரிய நமஸ்காரம் என்ற ஒன்றைச் சொல்லித் தந்திருக்கிறார்கள். விஞ்ஞானபூர்வமாக, இது, விற்றமின் ‘டி’யைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு அம்சமாகவே நாம் கருதவேண்டும். வெளிநாட்டவர்கள் இதை உணர்ந்துதான் ‘ச ன் பாத்’ என்ற பெயரில் விற்றமின் ‘டி’யைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இவற்றோடு சீரான உடற்பயிற்சி அவசியம். நாம்எவ்வளவுதான் போஷாக்கான ஆகாரங்களை உட்கொண்டாலும், உடற்பயிற்சியின் மூலமே அவை இரத்தத்தில் கலந்து உடல்உறுப்புகளுக்குச் சென்று சேர்கிறது. இவை இரண்டையும் ஒழுங்காகக் கடைப்பிடித்தால், ஒஸ்டியோபொரோசிஸைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

இவை அனைத்தையும் விட முக்கியமான விடயம், எலும்புகள் உறுதியடையக்கூடிய வாய்ப்பு 25 வயது வரையான காலப்பகுதியே இருக்கிறது. ஆகையால், சிறு வயது முதலே இந்த தற்காப்பு முறைகளைச் செயற்படுத்துவதும் மிக மிக அவசியம்.

எலும்பு அடர்த்தி என்ற பரிசோதனையின் மூலமும், எக்ஸ்ரே மற்றும் இரத்தப் பரிசோதனைகள் மூலமும் ஒஸ்டியோபொரோசிஸைக் கண்டறியலாம். முக்கியமாக 40, 45 வயது மட்டத்தை உடையவர்கள் - மிக முக்கியமாகப் பெண்கள் - இந்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேண்டும். ஏனெனில், மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ எனும் சுரப்பு சுரக்கிறது. இது எலும்புகளுக்குத் தேவையான போஷாக்கை அளிக்கிறது. மாதவிடாய் வருவது நின்றுவிடும் பட்ச த்தில் இந்தப் போஷாக்கு அவர்களது எலும்புகளுக்குக் கிடைப்பதில்லை. 

அப்படி அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் ச ந்தர்ப்பத்தில், இம்மாதிரியான வியாதியஸ்தர்களுக்காகவே, வருடத்துக்கு ஒரே ஒரு முறை இட்டுக்கொள்ளும் ஊசி மருந்துகள் தற்போது அறிமுகமாகியுள்ளன. இவற்றை வருடா வருடம் போட்டுக்கொண்டால், எலும்பு முறிவுகளை 90 சதவிகிதம் தடுத்துவிட முடியும். ஆயினும், துரதிர்ஷ்டவச மாக இதுபோன்ற செ ய்திகள் மக்களிடத்தில் வெகுவாகப் பரவவில்லை. 

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயஸ்தீனியா கிராவிஸ் எனும் ஒட்டோ இம்யூன்...

2024-02-27 15:19:13
news-image

இணைப்பு திசுக்களில் ஏற்படும் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-26 17:08:02
news-image

சிலிகோசிஸ் எனும் நாட்பட்ட நுரையீரல் பாதிப்பிற்குரிய...

2024-02-22 17:04:44
news-image

டெர்மடோமயோசிடிஸ் எனும் தசை வீக்க பாதிப்பிற்குரிய...

2024-02-20 16:54:31
news-image

தீவிர ஒவ்வாமை பாதிப்புக்குரிய நவீன சிகிச்சை

2024-02-19 18:58:31
news-image

மென்திசு சர்கோமா புற்றுநோய் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-17 17:36:29
news-image

பிரைமரி பிலியரி கோலாங்கிடிஸ் எனும் கல்லீரல்...

2024-02-17 16:39:47
news-image

செரிபிரல் வெனஸ் த்ராம்போஸிஸ் எனும் பெரு...

2024-02-16 20:22:59
news-image

தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாட்டிற்குரிய நவீன சிகிச்சை

2024-02-14 16:15:29
news-image

லிம்பெடிமா எனும் நிணநீர் மண்டல பாதிப்பிற்குரிய...

2024-02-13 16:55:56
news-image

புற்று நோய்க்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை...

2024-02-12 16:40:05
news-image

நியூரோஎண்டோகிரைன் கட்டிகளுக்கு நிவாரணமளிக்கும் சிகிச்சை

2024-02-09 16:49:44