இந்தோனேசியாவில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததோடு 200 க்கும் அதிகமான பொது மக்கள் காயமடைந்துந்துள்ளனர்.

(Bawaslu) in Jakarta Photograph: Bay Ismoyo/AFP/Getty Images

இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி பதவித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோகோ விடோடா வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில் விடோடாவிற்கு 55.5  வீத வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 வீத வாக்குகளும் கிடைத்தன.

எனினும் அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேன்முறையீடு செய்யக்கூடும் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தகவல்வெளியாகியதை அடுத்து ஆர்ப்பாட்ட காரார்கள் வன்முறைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வன்முறையில் சிக்கியே 6 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.