1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்....

Published By: Vishnu

22 May, 2019 | 03:07 PM
image

கடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியனானது.

* அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் 1992 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை 5 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

* கிண்ணத்தின் பெயர் - பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் (Benson & Hedges cup)

* 18 மைதானங்களில் மொத்தமாக 39 போட்டிகள் இடம்பெற்றன.

* 9 அணிகள் கலந்து கொண்டன (நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, இலங்கை மற்றும் சிம்பாப்வே)

இனவெறி கொள்கையால் தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டிருந்த 21 ஆண்டு கால தடை நீக்கப்பட்டதால் அந்த அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தில் சேர்க்கப்பட்டது. 

* அணி வீரர்கள் வழக்கமான வெள்ளை நிற சீருடையில் இருந்து பெயர் பொறிக்கப்பட்ட வர்ணமயமான உடைக்கு மாறினர். 

* முதல்முறையாக வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டது. 

*  பகல்-இரவு ஆட்டங்கள் முதல்முறையாக அரங்கேறின. 

*  முதல் 15 ஓவர்களில் குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே 2 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் நிற்கும் விதியும் அறிமுகம். 

* 9 அணிகள் கலந்துகொண்டமையினால் போட்டி அட்டவணை மாற்றப்பட்டு ரவுண்ட் ரொபின் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதின

  • ரவுண்ட் ரொபின் சுற்று முடிவு :

நியூஸிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 7 இல் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் முதல் இடம்.

இங்கிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியையும், 2 தோல்வியையும் சந்தித்து 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்.

தென்னாபிரிக்கா அணி மொத்தமாக 8 போடிகளில் விளையாடி 5 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 10 புள்ளிகளுடன் முன்றாவது இடம்.

பாகிஸ்தான் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 9 புள்ளிகளுடன் நான்காவது இடம்.

அவுஸ்திரேலியா அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஆறாவது இடம்.

இந்திய அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றியையும், 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் ஏழாவது இடம்.

இலங்கை அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றி, 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் எட்டாவது இடம்.

சிம்பாப்வே அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி, 7 இல் தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடம்.

ரவுண்ட் ரொபின் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்த நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி எடன் பார்க்கில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டி நியூஸிலாந்து - பாகிஸ்தான்

நியூஸிலாந்து 262/7 (50 overs)

பாகிஸ்தான் 264/6 (49 overs)

4 விக்கெட்டுக்களினால் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.

1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி சிட்டினியில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா

இங்கிலாந்து   252/6 (45 overs)

தென்னாபிரிக்கா 232/6 (43 overs)

20 ஓட்டத்தினால் தென்னாபிரிக்க அணியை சாய்த்து மூன்றாவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கான அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் 87 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான், கிரேஹம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இறுதிப் போட்டி இடம்பெற்றது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை குவித்தது.  

இம்ரான் கான் 110 பந்துகளை எதிர்கொண்டு 72 ஓட்டங்களையும், ஜாவிட் மியாண்டட் 98 பந்துகளில் 58 ஓட்டத்தையும், இன்சமாம்-உல்-ஹக் 46 பந்துகளில் 42 ஓட்டத்தையும் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்படியாக பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் டி.ஆர். ப்ரிங்கன் 3 விக்கெட்டுக்களையும், பொத்தம் மற்றும் ஆர்.கே.இல்லிங்வொர்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

250 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 227 ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பெயர்பிரதர் 70 பந்துகளில் 62 ஓட்டத்தையும், ஏ.ஜே. லாம்ப் 31 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ‘ஸ்விங்’ பந்து வீச்சால் அசத்திய வாசிம் அக்ரம், முஸ்தாக் அகமட் தலா 3 விக்கெட்டுக்களையும், ஆகிப் ஜாவேத் 2 விக்கெட்டுக்களையும், இம்ரான் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதன் மூலம் 22 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தை கையில் ஏந்தியதுடன் இம்ரான் கானும் ( தற்போதைய பாகிஸ்தான் பிரதமர்) சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 

 

* போட்டியின் ஆட்டநயகனாக பாகிஸ்தான் அணியின் வசிம் அக்ரம்

* அதிக ஓட்டம் - நியூஸிலாந்து அணியின் மார்ட்டின் குரோவ் ( 9 போட்டிகளில் 456 ஓட்டம்)

* அதிக விக்கெட்டுகள் - பாகிஸ்தானின் வசிம் அக்ரம் (10 போட்டிகளில் 18 விக்கெட்)

 

(தொகுப்பு : ஜெ.அனோஜன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35