விடுதலைப் புலிகளுக்கு எதிரான  யுத்த வெற்றியின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றது. 

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வன்னிப் படைக்கட்டளை தலைமையகத்தின் முன்னால் ஆரம்பித்த இந்த அணிவகுப்பு ஏ9 வீதியூடாக சென்று வவுனியா ஸ்ரீபோதி தக்சீனாராமய விகாரையில் நிறைவடைந்தது. 

குறித்த இராணுவ அணிவகுப்பு மரியாதையை வன்னிப் படைக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுதுபெரேரா மற்றும் வன்னி படைத் தலைமையக இராணுவ உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். 

இதன்போது இராணுவ அணிவகுப்பு மற்றும் வாகனப் பவனி என்பனவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.