அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், சமுர்த்தி பயனாளிகள், மூத்த பிரஜைகளுக்கு சலுகை விலையில் ஸ்மார்ட் போன்கள், பெக்கேஜ்களை வழங்கும் மொபிடெல்

Published By: Robert

27 Apr, 2016 | 09:27 AM
image

செயற்­திறன் மிக்க சேவை மற்றும் புதிய தொழில்­நுட்­பத்­து­ட­னான தொடர்­பாடல் முறை­மையின் மூலம் முழு உல­கி­னையும் ஒன்­றி­ணைத்து தமது சேவை­களை முன்­னெ­டுத்­து­வரும், இலங்­கையின் தேசிய கைய­டக்க தொலை­பேசி சேவை வழங்­கு­ன­ரான ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் நிறு­வ­ன­மா­னது தற்­பொ­ழுது அரச ஊழி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமுர்த்தி பய­னா­ளிகள் மற்றும் மூத்த பிர­ஜை­க­ளுக்கு மாதாந்த கட்­டண அடிப்­ப­டையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபிடெல் பெக்­கேஜ்­களை வழங்க முன்­வந்­துள்­ளது. இந்­நி­க­ழ்ச்­சித்­திட்­ட­மா­னது தொலைத்­தொ­டர்பு மற்றும் டிஜிட்டல் கட்­ட­மைப்பு தொடர்­பான அமைச்சின் எண்­ணக்­க­ருவின் அடிப்­ப­டையில் அமைச்சர் ஹரண் பெர்­ண்­டோவின் வழி­காட்­டலின் கீழ் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன், அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்கும் நவீன தொழில்­நுட்ப வச­தி­களை அனு­ப­விப்­ப­தற்­கான வாய்ப்­பினை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்­காக அரசு மேற்­கொண்டு வரும் முயற்­சி­க­ளுக்கு உந்து சக்­தி­யாக இச் செயற்­றிட்டம் அமைந்­துள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

இச்­செ­யற்­றிட்­டத்தின் கீழ் அரச ஊழி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமுர்த்தி பய­னா­ளிகள் மற்றும் மூத்த பிர­ஜை­க­ளுக்கு மாதாந்த கட்­டண அடிப்­ப­டையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபிடெல் பெக்­கேஜ்கள் வழங்­கப்­படும். அத்­துடன் அரச ஊழி­யர்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஸ்மார்ட் போன்­களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்­டி­யுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

மொபிடெல் நிறு­வனம் கடந்த 2008 ஆம் ஆண்டு அரச ஊழி­யர்­க­ளுக்கு “மொபிடெல் உப­ஹார” சேவை­யினை அறி­மு­கப்­ப­டுத்தி நாட்டின் தொடர்­பாடல் துறையில் மிகப் பெரி­யதோர் புரட்­சி­யினை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை நாம் யாவரும் அறிந்­ததே. 2012 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட “மொபிடெல் உப­ஹார ப்ரோட்பான்” சேவையின் மூலம் அரச ஊழி­யர்­க­ளுக்கு மிக சிறந்த சேவை­யினை வழங்­கி­யி­ருந்­த­துடன் தற்­பொ­ழுது மேம்­ப­டுத்­தப்­பட்ட மிகச் சிறந்த சேவை­யினை வழங்க நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

நவீன தொழில்­நுட்­பத்தின் அனு­கூ­லத்­தினை அனை­வரும் அனு­ப­வித்­திடும் பொருட்டு முன்­னெ­டுக்­கப்­படும் இச்­செ­யற்­றிட்­டத்தின் மூலம் தொலை­பே­சி­யொன்­றினை பெற்றுக் கொள்­வ­தற்கு எந்­த­வொரு முற்­கொ­டுப்­ப­ன­வி­னையும் செலுத்தத் தேவை­யில்லை. மாறாக மீள திருப்பிப் பெறக்­கூ­டிய (Refundable Deposit) வைப்­பாக சிறு தொகை­யினை வைப்­பிட வேண்டும். தொலை­பே­சியின் பெறு­ம­தி­க்குரிய செலுத்த வேண்­டிய தொகை­யாது 24 மாதங்­க­ளுக்கு மாதாந்தம் மொபிடெல் பிற­கொ­டுப்­ப­னவு பட்­டியல் கட்­ட­ணத்­துடன் சேர்க்­கப்­படும். ஒப்­பந்த கால முடிவின் போது ஆரம்­பத்தில் வைப்பு செய்­யப்­பட்ட தொகை­யா­னது மீள் அளிப்பு செய்­யப்­படும்.

மேலும் இத்­திட்­டத்தின் கீழ் வழங்­கப்­படும் கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளா­னவை அதனை தயா­ரித்து விநி­யோகம் செய்யும் நிறு­வ­னத்தின் உத்­த­ர­வா­தத்­தினை கொண்­டிருக்கும். தேசிய அடை­யாள அட்டை மற்றும் ஏனைய ஆவ­ணங்­களைச் சமர்ப்­பித்து ஆரம்பக்கட்ட பரிசீலனைகளின் பின்னர் மேற் குறித்த பிரிவினைச் சேர்ந்த நபர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் அல்லது நவீன தொழில் நுட்பத்துடனான கையடக்கத் தொலைபேசியுடன் மொபிடெல் பிற்கொடுப்பனவு பொதியொன்றும் வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த்...

2024-09-09 20:40:22
news-image

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க ரணில் வில்லத்தரகே...

2024-09-09 19:39:28
news-image

50 ஆண்டுகளை நிறைவு செய்யும் எய்ட்கன்...

2024-09-09 10:20:01
news-image

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும்...

2024-09-09 09:30:01
news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54
news-image

இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC)...

2024-09-06 09:46:27
news-image

குழந்தைப் பருவ விருத்தியில் பெரும் மாற்றத்திற்காக...

2024-08-29 19:34:33
news-image

கூட்டுறவு மதிப்புச் சங்கிலி மற்றும் விநியோகச்...

2024-08-27 14:20:30
news-image

அமானா வங்கி மற்றும் Prime குரூப்...

2024-08-26 15:21:48
news-image

2024\25இன் முதலாவது காலாண்டில் வலுவான செயற்றிறனைக்...

2024-08-20 21:41:17
news-image

இலங்கையின் முதலாவது நவீன இல்லத் தொடர்மனை...

2024-08-20 15:28:49
news-image

தேயிலை ஏற்றுமதி, இறக்குமதியில் முன்னணி வகிக்கும்...

2024-08-26 14:41:55