அமெ­ரிக்­கா­வா­னது  ஈரானை   போர் அச்­சு­றுத்தல் விடுப்­பதை விடுத்து  மரி­யா­தை­யுடன் நடத்த வேண்டும் என  ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர்  மொஹமட் ஜாவத் ஸரீப் அழைப்பு விடுத்­துள்ளார்.

ஈரான் போரில் ஈடு­பட விரும்­பு­மானால் அது அதற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மான முடி­வா­கவே அமையும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் அச்­சு­றுத்தல் விடுத்து  ஒரு நாள் கழித்து ஈரா­னிய  வெளிநாட்டு அமைச்சர் மேற்­படி அழைப்பை விடுத்­துள்­ளமை  குறிப்­பி­டத்­தக்­கது.

"அமெ­ரிக்க ஜனா­தி­பதி வர­லாற்றை நோக்க  வேண்டும். ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் அனை­வரும் சென்­று­விட்ட  நிலையில்  ஈரா­னி­யர்கள் மிலேனியம் ஆண்­டுக்­காக நிமிர்ந்து நிற்­கின்­றனர். அத­னது பணிக்­காக அதற்கு மரி­யாதை செய்ய முயற்­சி­யுங்கள்"  என ஜாவத் ஸரீப் தெரி­வித்தார்.

 ஈரா­னி­ட­மி­ருந்­தான தாக்­குதல் அச்­சு­றுத்­தலைக் காரணம் காட்டி அமெ­ரிக்கா வளை­குடா பிராந்­தி­யத்தில் அண்­மைய நாட்­களில் மேலும் தனது போர் கப்பல்களையும் விமா­னங்­களையும் நிலை­நி­றுத்தும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­கி­றது.

 அமெ­ரிக்­காவில் கல்வி கற்­ற­வ­ரான  ஜாவத் ஸெரீப்   இதற்கு முன்னர் அமெ­ரிக்க ஜனா­தி­பதி  டொனால்ட் ட்ரம்பால் வெளியி­டப்­பட்ட விமர்­ச­னங்கள் குறித்து பாராட்டைத் தெரி­வித்து வந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் பகு­தி­யாக அர­சாங்­கத்­திற்கு உடை­மை­யான தஸ்னிம் செய்தி முகவர் நிலையம்  ஈரானின்  அணு­சக்தி நிலை­யத்தின் பேச்­சா­ள­ரான பெஹ்ரோஸ் கமல்­வன்­டியை  மேற்­கோள்­காட்டி வெளியிட்ட செய்­தியில், பொது­மக்­களின் பயன்­பாட்­டுக்கு பொருத்­த­மான   அணு­சக்தி உற்­பத்­திக்­காக யுரே­னிய உற்­பத்­தியை 3.67 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

குறைந்­த­ளவில் செறி­வாக்­க­ப்பட்ட யுரே­னிய உற்­பத்­தியை  நான்கு மடங்­காக அதி­க­ரிக்கும் நகர்வு குறித்து சர்­வ­தேச அணு­சக்தி நிலை­யத்­துக்கு  அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தாக கமல்­வன்டி தெரி­வித்­துள்ளார்.

அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் கைச்­­சாத்­திட்ட ஏனைய நாடு­க­ளான  ரஷ்யா, சீனா,  பிரித்­தா­னியா,  பிரான்ஸ், ஜேர்­மனி  ஆகிய நாடுகள்  60 நாட்­களில் தனது  முக்­கிய எண்ணெய் மற்றும் வங்கித்துறை­களை  பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் தாம் யுரே­னிய மட்­டத்தை 3.67 சத­வீ­தத்­திற்கும் அப்பால் மேற்­கொள்ள நேரிடும் என ஈரான் எச்­ச­ரிக்கை விடுத்துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட்  ட்ரம்ப் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவால் கைச்­சாத்­தி­டப்­பட்ட  அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யா­னது  ஈரா­னிய ஏவு­க­ணைகள் மற்றும்  மத்­திய கிழக்­கி­லான பிரச்­சி­னை­களில் அதன் வகிபாகம் என்பவற்றை  உள்ளடக்கவில்லை என குற்றஞ்சாட்டி அந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்காவை  வாபஸ் பெற்றுக் கொண்டது முதற்கொண்டு ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான முறுகல் நிலை அதிகரித்துள்ளது.

இன்றைய நிலைமை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் பொருத்தமானதாக இல்லை அதனால் எதிர்த்து நிற்பதே  ஒரே தெரிவாகவுள்ளது என ஈரானிய ஜனாதிபதி  ஹஸன் ரோஹானி தெரிவித்ததாக அந்நாட்டு ஐ.ஆர்.என்.ஏ. ஊடகம் நேற்று முன்தினம்  திங்கட்கிழமை இரவு அறிக்கையிட்டுள்ளது.