குடி­ம­க­னதும் குடி­ம­க­ளதும் அடிப்படை உரிமை ! : வாக்காளராகப் பதிவை உறுதி செய்வோம் !

Published By: Digital Desk 3

22 May, 2019 | 10:36 AM
image

வாக்­கு­ரிமை நாட்டின் உரி­மை­யுள்ள ஒவ்­வொரு குடி­ம­க­னதும், குடி­ம­க­ளதும் பெறு­மதி வாய்ந்த அடிப்­படை உரி­மை­யாகும். அதனால் அதனை உணர்ந்து, புரிந்து ஒவ்­வொ­ரு­வரும் வாக்­காளர் இடாப்பில் தமது பெயரைப் பதிவு செய்­வதில் விழிப்­பா­யி­ருத்தல் வேண்டும். ஒவ்­வோ­ராண்டும் அந்த ஆண்­டுக்­கு­ரிய வாக்­காளர் இடாப்­புகள் மீளாய்வு செய்­யப்­ப­டு­கின்­றன. அந்த முறை­யிலே இவ்­வாண்டு அதா­வது 2019 ஆம் ஆண்­டிற்­கு­ரிய வாக்­காளர் இடாப்பு மீளாய்வுப் பணிக்­கான செயற்­பா­டுகள் தேர்­தல்கள் திணைக்­க­ளத்தால் ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 

அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நாட்டு மக்­க­ளுக்­கு­ரிய உண்­மை­யான இறை­மையைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான வலிமை வாக்­கு­ரி­மைக்கே உள்­ளது. இந்த உரி­மையைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு வாக்­காளர் இடாப்பில் பெயர் பதி­யப்­பட்டு இடம்­பெற்­றி­ருப்­பது அவ­சி­ய­மாகும். வாக்­காளர் இடாப்பில் பெய­ரில்­லா­தவர் நாட்டின் உரி­மை­யுள்ள பூரண குடி­மகன் என்று கூற­மு­டி­யாது. இதுவே உண்மை நிலை.

வாக்­கு­ரி­மை­யா­னது நாட்டில் நடை­பெறும் தேர்­தல்­களில் வாக்குச் சீட்டில் புள்­ள­டி­யி­டு­வ­தற்கு மட்­டுமே அல்ல. தாம் விரும்பும் தனக்­கு­ரிய பிர­தி­நி­தியைத் தெரிவு செய்­யவும் அதேபோல் தாம் ஏற்­க­னவே ஆர்­வத்­துடன் வாக்­க­ளித்த பிர­தி­நிதி வழி­த­வறி செயற்­பட்டால் அவரை மீளவும் தெரி­வா­காதபடி தடுத்­துக்­கொள்­ளவும் கூடிய வலிமை வாக்­கு­ரிமை உள்ள ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் உண்டு. வாக்­காளர் இடாப்பில் பெயர் இடம்­பெ­று­வதன் மூலம் தனது இருப்­பி­டத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­ள­மு­டியும். அதேபோல் தேசிய அடை­யாள அட்டை, கட­வுச்­சீட்டு, நற்­சான்­றிதழ், பரீட்­சைக்­கான விண்­ணப்­பத்தை உறு­திப்­ப­டுத்தல் போன்ற அத்­தி­யா­வ­சியத் தேவை­க­ளுக்கு கிராம சேவை அலு­வ­ல­ரிடம் சேவை பெறச்­செல்லும் போது அவர் குறித்த தேவை­களை நிறை­வேற்றப் பயன்­ப­டுத்­து­வது வாக்­காளர் இடாப்­பை­யே­யாகும். வாக்­காளர் இடாப்பில் பெயர் இருந்தால் மட்­டுமே அடிப்­படைத் தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும். அத்­துடன் தாம் வாழும் பிர­தே­சத்தில் தமது சமூகப் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளையும் பெற்­றுக்­கொள்ள முடியும். 

இவ்­வாண்டு அதா­வது 2019 ஆம் ஆண்­டுக்­கு­ரிய வாக்­காளர் மீளாய்வுப் படி­வங்கள் பிரிவு கிராம சேவை அலு­வ­லர்­க­ளூ­டா­கவும், பெரு­ந­கரப் பகு­தி­களில் விசேட கணக்­கெ­டுப்பு அலு­வ­ல­க­ரூ­டா­கவும் யூன் மாதம் 14 ஆம் திக­திக்கு முன் ஒவ்­வொரு குடி­யி­ருப்­பா­ள­ருக்கும் வழங்க தேர்­தல்கள் திணைக்­க­ளத்தால் விநி­யோ­கிக்க ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. குறித்த திகதி வரை வாக்­காளர் இடாப்பு மீளாய்வுப் படிவம் கிடைக்கப் பெறா­த­வர்கள் தமது பிரிவு கிராம சேவை அலு­வ­ல­ரி­டமோ, மாவட்ட தேர்­தல்கள் அலு­வ­ல­கத்­திலோ பெற்­றுக்­கொள்ள முடியும்.

தமக்குக் கிடைத்த படி­வத்தில் வின­வப்­பட்­டி­ருக்கும் அனைத்து விப­ரங்­க­ளையும் சரி­யாகப் பூர்த்­தி­செய்து கிராம சேவை அலு­வ­ல­ரி­டமோ, விசேட கணக்­கெ­டுப்பு அலு­வ­ல­ரி­டமோ காலம்­தாழ்த்­தாது வழங்­க­வேண்டும். எவ்­வா­றா­வது மாவட்ட தேர்­தல்கள் அலு­வ­ல­கத்­திற்கு தமது படிவம் சென்று சேர்­வதை உறு­திப்­ப­டுத்திக் கொள்­ள­வேண்டும். அது வீட்டின் பிர­தம குடி­யி­ருப்­பா­ளரின் பொறுப்­பாகும். 

அண்­மையில் நடை­பெற்ற தேர்­தல்­களில் வாக்­க­ளித்தோம். அதனால் தமது பெயர்கள் மீளாய்வுப் படிவம் வழங்­கா­விட்­டாலும் அவை இயல்­பா­கவே வாக்­காளர் இடாப்பில் இடம்­பெறும் என்று எவரும் தவ­றாக எண்ணி வாளா­வி­ருந்து விடக்­கூ­டாது. அந்­தந்த ஆண்­டுக்­கு­ரிய மீளாய்வுப் படி­வத்தில் பதிந்து கைய­ளிக்­கப்­படும் பெயர்கள் மட்­டுமே அந்த ஆண்­டிற்­கான புதுப்­பிக்­கப்­பட்ட வாக்­காளர் இடாப்பில் இடம்­பெறும் என்­பதை நினை­வி­லி­ருத்­திக்­கொள்ள வேண்டும்.

ஏற்­க­னவே வாக்­காளர் இடாப்பில் இடம்­பெற்­றி­ருந்த பெயர்கள் மீளவும் மீளாய்வுப் படி­வத்தில் பதி­யப்­பட வேண்­டு­மென்­ப­துடன் இவ்­வாண்டு யூன் மாதம் முதலாம் திக­தி­யன்று பதி­னெட்டு வயதைப் பூர்த்தி செய்­த­வர்­க­ளது பெயர்­க­ளையும் பதிய வேண்டும். தொழில் மற்றும் கல்வி போன்ற கார­ணி­களால் குறித்த வீட்டில் தற்­போது வதி­யா­த­வர்­க­ளது, வேறி­டங்­க­ளி­லி­ருப்­ப­வர்­க­ளது பெயர்­களும் பதிவு செய்ய வேண்டும். அதேபோல் புதி­தாகக் குடி­வந்­த­வர்­க­ளாக இருப்­பினும் குறித்த வீட்டு முக­வ­ரியில் பதிவு செய்ய முடியும்.

இறந்­த­வர்கள் அல்­லது நிரந்­த­ர­மாக குறித்த முக­வ­ரி­யி­லி­ருந்து அகன்­ற­வர்­களின் பெயர்­களைப் பதிவு செய்­யக்­கூ­டாது.

வாடகைக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கும் தாம் வசிக்கும் வீட்டின் முக­வ­ரியில் தம்மை வாக்­கா­ள­ராகப் பதிவு செய்­து­கொள்ளும் பூரண உரி­மை­யுள்­ளது. வாடகைக் குடி­யி­ருப்­பா­ள­ரென்று காரணம் கூறி வீட்­டு­ரி­மை­யா­ளரோ அல்­லது கிராம சேவை அலு­வ­ல­கரோ எவ­ரது பெய­ரையும் வாக்­காளர் இடாப்பில் பதிவு செய்­வதை மறுக்க முடி­யாது. அது தேர்­தல்கள் சட்­டப்­படி குற்­ற­மாகக் கரு­தப்­படும் என்­ப­தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்­மாடிக் குடி­யி­ருப்­பு­க­ளி­லி­யங்கும் வீட்டு உரி­மை­யாளர் சங்­கங்கள் அவற்றில் வாட­கைக்குக் குடி­யி­ருப்­ப­வர்­களின் பெயர்­களை வாக்­கா­ள­ராகப் பதிவு செய்­வதில் தடை­யாக இருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. அதுவும் தவ­றான குற்­ற­மா­கவே கரு­தப்­படும். அதேபோல் அர­சியல், தொழிற்­சங்க மற்றும் இன, மத, மொழி ரீதி­யான காழ்ப்­பு­ணர்ச்­சி­யாலும் வாக்­காளர் இடாப்பில் நியா­ய­மாக இடம்­பெற வேண்­டிய பெயர்கள் பதி­யப்­ப­டாமல் விடப்­படும் சந்­தர்ப்­பங்­களும் கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக அறிக்­கை­யி­டப்­பட்டு வந்­துள்­ளது. 

எவ்­வா­றி­ருந்த போதிலும் ஒவ்­வொ­ரு­வரும் தமது வாக்­கு­ரி­மையின் பெறு­ம­தி­யையும், வாக்­காளர் இடாப்பில் தமது பெயர் இடம்பெறுவதால் கிடைக்கும் நன்மைகளையும் தவறாது கவனத்தில்கொண்டு தமது பெயர்களை மீளாய்வுப் படிவத்தில் பதிவுசெய்து உரியபடி தேர்தல்கள் அலுவலகங்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அரசியல் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும், சமய சமூக அமைப்புகளும், சமூக நல ஆர்வமுள்ளவர்களும், ஆசிரியர்கள், அதிபர்கள் போன்ற சமூகப் பொறுப்புள்ளவர்களும் அனைவரும் வாக்காளர் மீளாய்வுப் படிவத்தில் தகைமையுள்ள அனைவரையும் இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அது சமூகக் கடமை. சமூகப் பொறுப்பு.

- த. மனோகரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04