அடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச 

Published By: Digital Desk 4

21 May, 2019 | 11:43 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், அடிப்படைவாதத்தையும், வஹாப் வாதத்தையும் இந்த அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்தோட்டங்கள் சட்டத்தின் கீழான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில். 

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவந்த போது இன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் குழுக் கூட்டத்தில் தனது கடுமையான எதிர்ப்பை ரிஷாத் தெரிவித்தாராம், இதற்கு அனுமதித்தால் தான் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாகவும் அவருடன் இணைந்து முஜிபூர் ரஹ்மானும் வெளியேறுவதாகக் கூறியதாகக் கூறுகின்றனர். 

கட்சித் தலைவர் கூட்டத்திலும் தெரிவுக்குழு அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதுதான் இவர்களின் இனவாத பயங்கரவாத பாதுகாப்பு அரசாங்கம். ரிஷாத் பதியுதீனை வெளியேற்றி வாக்குகளைத்  தக்கவைக்க முடியாது எனத் தெரிந்தே அரசாங்கம் ரிஷாத் பதியூதினை காப்பாற்ற முயல்கின்றனர். முஸ்லிம் வகாப் வாதத்திற்கு இணங்கும்  தலைவர்கள் தான் இன்று குற்றவாளிகளைக் காப்பாற்றுகின்றனர். தயாசிறி தாக்குதல் சம்பவ இடத்துக்குச் சென்றதற்காக வாக்குமூலம் பெற முடிந்தது என்றால் ஏன் ரிஷாத் பதியுதீன் விடயத்தில் இன்னமும் வாக்குமூலம் ஒன்றினை பெறவில்லை.

அடுத்த வாரமாவது ரிஷாத் பதிதுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர முடியும் என நம்பினோம். அதற்கு ஏன் அரசாங்கம் அஞ்சுகின்றது. இந்த அரசாங்கம் தான் ரிஷாத்தை பாதுகாக்கின்றது. அடிபடிவாதம், வகாப் கொள்கையைப் பாதுகாப்பது இந்த அரசாங்கமே. சபாநாயகர் ஜனநாயக வாதியெனவும் சிங்கள பௌத்த தலைவர் எனவும்  கூறுகின்றார். 

ஆகவே அடுத்த வாரம் நம்பிக்கையிலா பிரேரணையை அனுமதிக்க வேண்டும், இந்த அரசாங்கம் என்ன கூறினாலும் அவர் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு  இல்லையேல் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தில் சுற்றிவளைக்கவும் நாம் தயங்க மாட்டோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14