(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்தவும்  மூன்றுவார காலத்தின் பின்னர் பிரேரணையை விவாதத்திற்கு  எடுப்பதற்கான நாள் குறிப்பிட முடியும் என கட்சி தலைவர் கூடத்தில் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

எனினும் இதற்கு கடுமையான எதிர்ப்பை மஹிந்த அணியினர் தெரிவித்துள்ள நிலையில் பிரதமருடன் பேசிய பின்னர் மீண்டும் அறிவிப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. 

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ள நிலையில் பிரேரணை குறித்து இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் ஆராயப்பட்டது. 

இது குறித்து ஆராய இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் கூடிய வேளையில் உடனடியாக இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபைக்கு கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன விமல் வீரவன்ச ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளார். 

எனினும் தாம் முன்வைத்த இந்த பிரேரணையின்  உள்ள காரணிகள் இன்னமும் உருதிப் படுத்தப்படாத காரணிகளாக உள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடத்த முதலில் பாராளுமன்ற தெரிவிக்குழுவை அமைக்க வேண்டும் எனவும் மூன்ருவாரகாலம் விசாரணை நடத்தி அதன் பின்னர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து விவாதம் நடத்த ஒரு நாளை வழங்க முடியும் என சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

காலையில் ஆளும்  தரப்பு குழுக் கூட்டம் கூடிய வேளையில் இந்த காரணிகள் ஆராயப்பட்டதாகவும் இதன்போதே தெரிவுக்குழு அமைத்து விசாரணைகளை நடத்தவும் ஆளும் தரப்பில் எட்டுப்பெரும் எதிர்க்கட்சியில் ஏழுபேரும் கொண்ட தெரிவுக்குழுவை அமைக்கவும் இணக்கம் காணப்பட்டதாவும் சபை முதல்வர் தெரிவித்துள்ளார். 

இதற்கு தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய விமல், தினேஷ் எம்.பியினர் அரசாங்கம் தொடர்ந்தும் மோசமான நடந்துகொள்வதாக கூறியுள்ளனர்.. அடுத்த வாரம் இந்த பிரேரணையை எடுத்துகொள்ள வேண்டும். அதற்கான சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். 

இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர், கட்சி தலைவர் கூட்டத்தில் முன்வைத்துள்ள இந்த தீர்மானத்தை அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டும். அவர்களின் முடிவே இறுதி முடிவாக அமையும் என கூறியுள்ளார்.