முல்­லைத்­தீவு வட்­டு­வா­கலில் வைத்து இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைத்த எனது கணவர் திரு­கோ­ண­மலை புல்­மோட்டை கடற்­படை முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பலர் தெரி­வித்­தனர். அவ்­வாறு தெரி­வித்த அவர்கள் கண­வனை மீட்டுத் தரு­வ­தற்கு பணம் வழங்­கு­மாறு கோரி­யி­ருந்­தனர். அவர்கள் கோரிய பணத்­தினை வழங்­கி­யி­ருந்தும் இன்­று­வரை எனது கணவன் விடு­விக்­கப்­ப­ட­வில்லை என இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்து காணாமல் போன மச்­ச­யக்­காளை கண்ணன் என்­ப­வ­ரது மனைவி ஆணைக்­கு­ழுவின் முன் சாட்­சி­ய­ம­ளித்­தார்.

கிளி­நொச்சி மாவட்டச் செய­ல­கத்தில் காணா­மல்­போனேர் தொடர்­பான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­ வி­சா­ரணை நேற்­றைய தினம் இடம்­பெற்­றது. இதன்­போதே குறித்த மனைவி மேற்­கண்­ட­வாறு சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார். அவர் அங்கு மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எனது கண­வரை நான் வட்­டு­வா­கலில் வைத்து இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்தேன். தற்­போது 7 வரு­டங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் கணவர் பற்­றிய எந்த தக­வலும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

எனது கணவர் கடந்த 2002ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் இணைந்து கொண்டு 2009ஆம் ஆண்டு வரையும் அதில் செயற்­பட்­ட­வ­ராவார். இறுதி யுத்தம் நிறைவு பெற்­றதன் பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நாங்கள் குடும்­ப­மாக இரா­ணு­வக்­கட்­டுப்­பாட்­டிற்குள் வந்தோம். இதன்­போது வட்­டு­வா­கலில் நின்ற இரா­ணு­வத்­தி­னரின் வாக்­கு­று­தி­களை நம்பி எனது கண­வரை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைத்தேன்.

பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு எனது கணவர் திரு­கோ­ண­மலை, புல்­மோட்டை கடற்­படை முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பலர் என்­னிடம் தெரி­வித்­த­துடன் கண­வரை அங்­கி­ருந்­து­மீட்­ப­தற்கு

அதிக பணம் செல­வாகும் என்றும் கூறினர். இந்­நி­லையில் எவ்­வா­றா­வது எனது கண­வனை

மீட்­ப­தற்­காக வெளிநாட்­டி­லுள்ள எனது சகோ­த­ர­னிடம் தெரி­வித்­திருந்தேன். எனது சகோ­த­ரனும் அவ்­வாறு கூறிய அந்த நபர்­க­ளுக்கு பணத்­தினை அனுப்­பி­யி­ருந்தார். இவ்­வாறு இரண்டு மூன்று

தட­வைகள் பணத்­தினைக் கொடுத்து ஏமாந்­துள்ளோம். எனினும் பணத்தினைப் பெற்ற வர்களிடமிருந்து இன்று வரை எவ்விதமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை. தயவுசெய்து எனது கணவனை மீட்டுத் தாருங்கள் என அவர் கண்ணீர் மல்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.