மகிழ்ச்சி என்­பது உங்கள் கைய­டக்கத் தொலை­பே­சி­களில் பதி­வி­றக்கம் செய்யும் மென்­பொருள் ஒன்­றல்ல என பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தெரி­வித்தார்.

ரோமில் சென் பீற்றர்ஸ் சதுக்­கத்தில் சுமார் 70,000 இளை­ஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்­சி­யொன்றில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தற்­போ­தைய இளை­ஞர்கள் கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து வரு­வதைக் கவ­னத்திற் கொண்டே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.இதன்­போது ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­யொன்றை கையில் பற்றிப் பிடித்த பாப்­ப­ரசர், இயேசுக் கிறிஸ்து இல்­லாத வாழ்க்கை சமிக்ஞை எது­வு­மற்ற கைய­டக்கத் தொலை­பே­சி­யொன்றைப் போன்­ற­தாகும் எனக் கூறினார்.

"நீங்கள் குடும்பம், தேவா­லயம் மற்றும் பாட­சாலை என்ற வலைப்­பின்­னலில் இருப்­பதை நிச்­ச­யப்­ப­டுத்திக் கொள்­ளுங்கள். சுதந்­திரம் என்­பது நீங்கள் விரும்­பு­வதை செய்­வது பற்­றி­ய­தாக எப்­போதும் இருக்­காது. அது சரி­யான பாதையை நீங்கள் தெரிவு செய்­வ­தற்கு கிடைத்­துள்ள வெகு­ம­தி­யாகும்.

உங்­க­ளு­டைய மகிழ்ச்­சிக்கு விலை கிடை­யாது. அதனை வாங்­கவோ விற்­கவோ முடி­யாது. அது உங்கள் கைய­டக்­கத்­தொ­லை­பே­சியில் பதி­வி­றக்கம் செய்யும் ஒரு மென்­பொருள் அல்ல. பிந்­திய கையடக்கத் தொலைபெசி மென்பொருள் கூட நேசிப்பதில் சுதந்திரத்தை உங்களுக்குத் தராது" என பாப்பரசர் தெரிவித்தார்.