வெசாக் விடுமுறை காரணமாக யாழ்.குடாநாட்டில் மரக்கறியின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் விலைகளில் வீழ்ச்சி ஏற்படும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 


திருநெல்வேலி , சுன்னாகம், மருதனார்மடம் சாவகச்சேரி உள்ளிட்ட சந்தைகளில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றது. ஒரு கிலோ மரக்கறியின் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது. 

அந்நிலையில் அது தொடர்பில் சந்தை வியாபரிகள் தெரிவிக்கையில் , வெசாக் விடுமுறைகள் காரணமாக தம்புள்ளையில் இருந்து வரும் மரக்கறிகளின் வரத்துக்கள் இல்லாமல் போனமையால் மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளன. எதிர்வரும் நாட்களில் தம்புள்ளை மரக்கறிகள் வருமிடத்து விலைகளில் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம். 

அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வீதிகளில் சோதனை நடவடிக்கைகள் காணப்படுவதனால் மரக்கறி ஏற்றுமதி , இறக்குமதியில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 

யாழ் - தம்புள்ளை பகுதிக்கு இடைப்பட்ட தூரத்தில் சுமார் 7 சோதனை சாவடிகளை கடக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால் பலரும் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட தயக்கம் காட்டி வருகின்றனர். என தெரிவித்தனர்.