இனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி முறையிலேயே அமைய வேண்டும் : சுவீடன் அமைச்சரிடம் சி.வி.   

Published By: MD.Lucias

27 Apr, 2016 | 08:26 AM
image

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு சமஷ்டி முறை­யி­ன் அடிப்படையிலேயே காணப்பட வேண்டும் என்று யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜ யம் மேற்­கொண்ட சுவீடன் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் எடுத்­து­ரைத்­துள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை வந்துள்ள சுவீடன் வெளி­வி­வ­கார அமைச்சர் மார்கொட் வோல்ட்ஸ்டர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இவர் வட­மா­காண முத­ல­மைச்­சரை கைத­டியில் அமைந்­துள்ள அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

இக்­க­லந்­து­ரை­யாடல் தொடர்­பாக முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்­த­தா­வது,

கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்ட சுவீடன் வெ ளிவி­வ­கார அமைச்சர் இலங்­கையின் அர­சியல் நிலைப்­பா­டு­தொ­டர்பில் தாம் அறிந்து வைத்­துள்­ள­தா­கவும் தற்­போது புதிய அர­சாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் அர­சியல் நிலைப்­பாடு எவ்­வாறு உள்­ளது என என்­னிடம் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

நாட்டில் அர­சியல் ரீதி­யாக மாற்­றங்கள் ஏற்­பட்டு ஜன­நா­யகம் எங்­க­ளிடம் பர­வி­யுள்­ளது என எண்ணு­கிறேன் என அவ­ரிடம் பதி­ல­ளித்­தி­ருந்தேன். இதன்­போது அவர், உங்­க­ளு­டைய நாட்­டிலே அனைத்து செயற்­பாட்­டையும் சேர்த்துப் பார்க்­கும்­போது நாடு நல்ல இடத்­தி­லேயே இருப்­பதை உண­ரு­கின்றேன் எனத் தெரி­வித்­த­துடன் தம்மால் எவ்­வி­த­மான உத­வி­க­ளையும் செய்­ய­மு­டி­யாமல் உள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

நாட்­டி­லுள்ள செயற்­பா­டுகள் அனைத்­தையும் இணைத்துப் பார்க்கும் போது நல்ல நிலையில் இருந்­தாலும் வட­மா­கா­ணத்தைப் பொறுத்­த­வரை பின்­தங்­கிய நிலை­யிலே உள்­ளது. எனவும் அதனை மீள்­கட்­ட­மைக்க உங்­க­ளு­டைய உதவி தேவை­யென்றும் சுவீடன் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தேன்.

இதே­வேளை வெளி­வி­வ­கார அமைச்சர் என்­னிடம் எதிர்­கா­லத்தில் எத்­த­கைய மாற்­றங்கள் ஏற்­ப­ட­வேண்டும் எனக் கேட்­டி­ருந்தார்.

அர­சியல் ரீதி­யான தீர்வைக் காண­வேண்­டிய அவ­சி­யத்தைக் அவ­ருக்கு எடுத்துக் கூறினேன். அதன்­போது அவர் எவ்­வா­றான தீர்வை எதிர்­பார்க்­கி­றீர்கள் என என்­னிடம் கேட்­டி­ருந்தார்.

சமஷ்டி முறையே சரி­யான தீர்வென கூறினேன். அதா­வது பல வரு­டங்­க­ளாக நாம் முன்­வைத்த இந்த சமஷ்டி முறைக்கு வலுச்­சேர்க்கும் வகையில் சுவிர்­ஸர்­லாந்தில் இருந்து நிபு­ணர்கள் அழைத்து வரப்­பட்டு கலந்­தா­லோ­சித்த பின்­னரே குறித்த முடிவை இறு­தி­யாக எடுத்­தி­ருந்தோம் என அவ­ரிடம் தெரி­வித்­தி­ருந்தேன்.

நான் கூறி­யதை ஏற்றுக் கொண்ட அவர், இத்­த­கைய தீர்வுத் திட்­டத்தை பெரும்­பான்மை இனத்­த­வர்கள் ஏற்றுக் கொண்­டுள்­ள­தாக தெரி­ய­வில்­லையே எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

நீங்கள் குறிப்­பி­டு­வது உண்­மை­யென அவ­ரிடம் தெரி­வித்த நான், அர­சி­யல்­வா­திகள் சமஷ்­டியை பிரி­வி­னை­வா­த­மாகக் கூறி­ய­த­னா­லேயே இத்­த­கைய நிலைப்­பாடு அவர்­க­ளிடம் உரு­வா­கி­யுள்­ளது. உண்­மையில் நாங்கள் சமஷ்­டியைக் கோரு­வது நாட்டை ஒற்­று­மைப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கவே. ஆனால் அதனை பிரி­வி­னை­வா­த­மாகத் பிரச்­சாரம் செய்­யப்­ப­டு­வதே பிரச்­சி­னை­யாக உள்­ளது என்­பதை வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் கூறினேன்.

இறு­தி­யாக வெளி­நாட்டு அர­சாங்கம் என்ற முறையில் எங்­க­ளு­டைய பங்கு எவ்­வாறு அமைய வேண்டும் என்­பதை எதிர்­பார்க்­கி­றீர்கள் என அவர் என்னிடம் கேள்வி முன்வைத்தார்.

வெளிநாட்டு அரசினுடைய பங்களிப்பு இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் நாம் மேலும் பாதிக்கப்பட்டுவிடுவோம். மேலும் ஜெனீவாத் தீர்மானங்கனை அரசாங்கம் கடைப்பிடிப்பதற்கு வெளிநாட்டு அரசுகளுடைய நெருக்குதல்களும் நல்லெண்ணங்களும் அறிவுரைகளும் எமக்கு நன்மைபயத்தது என அவரிடம் தெரிவித்திருந்தேன் எனக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50