கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் திரைப்படமாக தயாரிக்கப்படவுள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே, கடந்த 1971 இல், போர் ஏற்பட்டது. அப்போது, டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி  இந்திய கடற்படை, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில், கடல் வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில், பாகிஸ்தானின் இரண்டு போர் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. துறைமுகத்தில் இருந்த எரிபொருள் கிடங்குகள் தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதலுக்கு, 'ஆப்பரேஷன் திரிசூல்'என, பெயர் வைக்கப்பட்டது. 

இந்த தாக்குதலில், இந்திய தரப்புக்கு சிறு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வெற்றியை நினைவுபடுத்தும் வகையில், ஆண்டுதோறும், டிச., 4ல், இந்திய கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், 'கடற்படை தினம்' என்ற தலைப்பில், கராச்சி துறைமுக தாக்குதல் சம்பவம், திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.

குறித்த இப்படத்தை தின விளம்பர படங்கள் மற்றும் பிரபலமான இயக்குனர், ரஜனீஷ் கய், இந்த படத்தை இயக்க உள்ளார். 

அத்தோடு அடுத்த ஆண்டு  ஆரம்பத்தில் இதற்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.