இரா­ணு­வத்­துக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்பை மேலும் விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்­காவும் இலங்­கையும் இணங்­கி­யுள்­ளன. வொஷிங்­டனில் நடந்த உயர்­மட்டப் பேச்­சுக்­களை அடுத்து வெளி­யி­டப்­பட்­டுள்ள கூட்­ட­றிக்­கை­யி­லேயே இரண்டு நாடு­களும் இதனைத் தெரி­வித்­துள்­ளன.

“ஜன­நா­யகம், மனித உரி­மைகள் மற்றும் சட்­டத்தின் ஆட்சி ஆகி­ய­வற்­றுக்­கான அர்ப்­ப­ணிப்பின் அடிப்­ப­டையில், அமெ­ரிக்­கா-­இ­லங்கை பங்­கு­டமை கலந்­து­ரை­யாடல் மே 6 ஆம் திகதி  வொஷிங்­டனில் நடை­பெற்­றது.

வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன அமெ­ரிக்­காவின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி இரா­ஜாங்க செயலர் டேவிட் ஹாலே ஆகி­யோரின் இணைத் தலை­மையில் இந்தக் கூட்டம் இடம்­பெற்­றது.

இரு­த­ரப்பு உற­வு­களின் முக்­கி­யத்­து­வத்­தையும்,  இரண்டு அர­சாங்­கங்­களும் மீள உறு­திப்­ப­டுத்­தின. பங்­கு­ட­மையை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக பணி­யாற்­று­வ­தற்கும் உறுதி பூண்­டுள்­ளன.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­கு­தலை அடுத்து,  தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான  இலங்­கை­யுடன் இணைந்து நிற்­பதை வெளிப்­ப­டுத்தி அமெ­ரிக்க ஜனா­தி­பதி வெளி­யிட்ட அறிக்கை மற்றும் இலங்­கைக்கு உதவி வழங்­கு­வ­தாக எடுக்­கப்­பட்ட முடிவை அமெ­ரிக்கா மீண்டும் உறு­திப்­ப­டுத்­தி­யது. அமெ­ரிக்­காவின் இந்த உத­வியை இலங்கை  மதிக்­கி­றது.

கொழும்பிலுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தின் பன்­முக உத­விகள், எவ்.­பி.ஐ. புல­னாய்­வா­ளர்­களின் விசா­ரணை உத­விகள் மற்றும் எதிர்­கா­லத்தில் சாத்­தி­ய­மாகக் கூடிய உத­விகள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

அனைத்­து­லக சட்­டங்­களை மதிக்கும் வகையில்  இந்தோ -பசுபிக் சமுத்­தி­ரங்­களில்,  பாது­காப்­பான கடல் பய­ணங்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு, அமெ­ரிக்­காவும் இலங்­கையும் இணைந்து பணி­யாற்றும்.

கண்­ணி­வெ­டி­களை அகற்­று­வ­தற்­கான அமெ­ரிக்க ஆத­ரவு, கூட்டு இரா­ணுவ செயற்­பா­டுகள், இலங்­கையின் அமைதி காப்பு நட­வ­டிக்­கைகள், இலங்கை அதி­கா­ரி­க­ளுக்கு மனித உரி­மைகள் பயிற்சி அளிப்பது  அமெ­ரிக்க கப்­பல்கள் மற்றும் இரா­ணுவ அதி­கா­ரி­களின் வரு­கைகள், உள்­ளிட்ட  தற்­போ­துள்ள இரு­த­ரப்பு பாது­காப்புத் துறை ஒத்­து­ழைப்பை இரண்டு நாடு­களும் வர­வேற்­றன.

இரா­ணுவ- ஒத்­து­ழைப்பை மேலும் விரி­வு­ப­டுத்­தவும் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

நிலை­யான அமைதி மற்றும் செழிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான, நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல், நீதி மற்றும் மனித உரி­மை­களை ஊக்­கு­விக்கும் இலங்­கையின் அர்ப்­ப­ணிப்பை அமெ­ரிக்கா வர­வேற்­கி­றது.

காணாமல் போனோர் பணி­யகம்,  இழப்­பீ­டு­க­ளுக்­கான பணி­யகம், மற்றும் படை­யினர் வச­மி­ருந்த நிலங்­களை மீள­ளிப்­பது தொடர்­பான விட­யங்­களில் காணப்­பட்­டுள்ள முன்­னேற்­றங்­களை அமெ­ரிக்கா ஏற்றுக் கொள்­கி­றது.

ஜன­நா­யகம், ஜன­நா­யக நிறு­வ­னங்கள் மற்றும் நடை­மு­றைகள், நல்­லாட்சி, சட்­டத்தின் ஆட்சி, நீதி மற்றும் பாரா­ளு­மன்ற நடை­மு­றை­களை வலுப்­ப­டுத்­து­வதில் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது.

இந்த கடப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்­கத்­துக்கு அமெ­ரிக்கா ஊக்­க­ம­ளிக்கும்.” என்றும், அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்தப் பய­ணத்தின்போது, அமெ­ரிக்­காவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஜோன் போல்­ட­னையும்  வெளி­வி­வ­கார அமைச்சர் சந்தித்துள்ளார்.