ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்த குறுந்தகவலொன்றை (sms) தனது கையடக்கத் தொலைப்பேசியில் வைத்திருந்த  இளைஞனை எல்ல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

Image result for sms

எல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து எல்ல நகரில் இளைஞரொருவரைக் கைது செய்த பொலிஸார், குறித்த  இளைஞனின் கையடக்கத் தொலைப்பேசியைச் சோதனை செய்த போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்த குறுந்தகவலொன்று இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து  கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் குறித்த குறுந்தகவலை அனுப்பிய மேலுமொரு இளைஞரையும், கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.கே. அலகியவன்ன தெரிவித்தார்.