கட்டாரில் உள்ள நாணயமாற்று இல்லங்களில் பணிபுரியும் ஒரு தொகுதி இலங்கையர்களை அண்மையில் கொமர்ஷல் வங்கி கௌரவித்துள்ளது. வங்கியின் நாணயமாற்று சேவையை அங்கு ஊக்குவிப்பதில் அவர்கள் வழங்கிய பங்களிப்புக்காகவே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.
தோஹாவில் உள்ள கிரேன்ட் மெகியுர் ஹோட்டலில் இந்த வைபவம் இடம்பெற்றது. 200க்கும் அதிகமான இலங்கையர்கள் இதில் பங்கேற்றனர். களிப்பூட்டும் விநோத நிகழ்ச்சிகள், இசை விருந்து என ஆரவாரமற்ற இடத்தில் அமைதியானதோர் ஒன்று கூடலாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையின் வெளிநாட்டு பணப்பரிமாற்றலுக்கான முக்கிய சந்தையாகத் திகழும் கட்டாரில் கிட்டத்தட்ட 125000 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். இலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டு வரும் பிரதான ஐந்து நுழைவாயில்களில்
ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது. அங்கு கணிசமான அளவு புலம்பெயர் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். இந்த தொழில்படைக்குத் தேவையான பணம் அனுப்பும் சேவைகளை வழங்குவதற்காக 20 பணப்பரிமாற்ற இல்லங்கள் அங்கு காணப்படுகின்றன. கொமர்ஷல் வங்கி நான்கு வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரிகளையும் அங்கு சேவையில் அமர்த்தியுள்ளது.
இலங்கைக்கு வெளிநாட்டு நாணயமாற்றைக் கொண்டு வருவதில் மிகவும் ஆக்கபூர்வமான ஒரு பங்களிப்பை கொமர்ஷல் வங்கி வழங்கி வருகின்றது. வங்கிக்கே சொந்தமான அதி நவீன உடனடி பணப்பரிமாற்ற சேவையான ஈ-எக்ஸ்சேன்ஜ் உட்பட மணிகிராம், றியா, எக்ஸ்பிரஸ் மணி ரெமிட்டன்ஸ் என இன்னும் பல சேவைகளையும் அது வழங்குகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM