மகேல ஜெயவர்த்தன  இலங்கை கிரிக்கெட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்தார் ஆனால் தோல்வியடைந்தார் நான் அந்த பாதையில் பயணிக்க விரும்பவில்லை அந்த முயற்சி அர்த்தமற்றது என கருதியதன் காரணமாகவே நான் அதில் ஆர்வம் காண்பிக்கவில்லை எனவும் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

மும்பாய் மிரரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

இலங்கை கிரிக்கெட் குறித்து நான் தற்போது எந்த கருத்தையும் வெளியிடவிரும்பவில்லை,கடந்த இரண்டு மூன்று வருடங்களில் இடம்பெற்ற விடயங்களை வைத்து பார்க்கும்போது நாங்கள் சரியான திசை நோக்கி செல்லவில்லை என முத்தையான முரளீதரன் தெரிவித்துள்ளார்.

பலர் இலங்கை கிரிக்கெட்டை பொறுப்பேற்றுள்ளனர்,அணித்தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர், எங்கள் வீரர்கள் தங்கள் திறமையை காண்பிப்பதற்கான நியாயமான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை  என தெரிவித்துள்ள  முத்தையா முரளீதரன் இளம் வீரர்களை வளர்த்தெடுக்கவில்லை  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயிற்றுவிப்பாளர்களை பொறுத்தவரை உரிய அமைப்பு முறை அவசியம்  உலக கிண்ணப்போட்டிகளிற்கு பின்னர் இதனை செய்யவேண்டும் மீண்டும் அணியை கட்டியெழுப்பவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகேல இலங்கை கிரிக்கெட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்தார் ஆனால் தோல்வியடைந்தார் நான் அந்த பாதையில் பயணிக்க விரும்பவில்லை அந்த முயற்சி அர்த்தமற்றது என கருதியதன் காரணமாகவே நான் அதில் ஆர்வம் காண்பிக்கவில்லை எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அதிகாரிகள் எங்கள் யோசனைகளை கருத்திலெடுப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தாங்கள் நினைத்ததை செய்கின்றனர்,நாங்கள் வெளியாட்கள் போல காணப்படுகின்றோம் என்பதே உண்மை,நாங்கள் அந்த அமைபின் ஒரு பகுதியாகயில்லை மாற்றங்களை கொண்டுவருவதற்கான அதிகாரமும் எங்களிடம் இல்லை எனவும் முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் நல்லவராகயிருந்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்பது அர்த்தமல்ல எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அணிக்கு தலைமை தாங்குபவர்கள் யாராகயிருந்தாலும் அவர்கள் துணிச்சலான தைரியமான வீரர்களாக காணப்படவேண்டும் நான் இவ்வாறே கருதுகின்றேன் எனவும் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்

திமுத் கருணாரட்ணவிற்கு இந்த குணாதிசயங்கள் உள்ளனவா என்பது எனக்கு தெரியவில்லை,ஒரு தலைவராக நான் அவரை அதிகளவிற்கு அவதானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அணித்தலைவர் அதன் காரணமாக அவர் முதலில் ஓட்டங்களை பெறவேண்டும்,அவரால் ஓட்டங்களை பெறமுடியாவிட்டால்  அவர் பலவீனமான தலைவராகவே விளங்குவார் எனவும் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவது சிறந்த விடயம் அணியை ஒன்றுபடுத்துவதற்கு அது பெரும் உதவியாக அமையும் எனவும் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவிற்கு சில வீரர்களுடன் பிரச்சினையுள்ளது, அவர் சில வீரர்கள் குறித்து மிகக்கடுமையாக நடந்துகொண்டார்,முடிவுகளை எடுக்கும்போது குறுகிய மனதுடன் செயற்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள முத்தையா  முரளீதரன் இது உண்மையா பொய்யா தெரியாது ஆனால் அணியை ஒற்றுமையுடன் வைத்திருக்க முடியாவிட்டால் அவர் தோல்வியடைந்தவரே எனவும் தெரிவித்துள்ள முத்தையா முரளீதரன் ஒரு அணியாக விளையாடுங்கள் தனிநபராக விளையாடதீர்கள் என்பதே இலங்கை அணிக்கான எனது ஆலோசனை எனவும் தெரிவித்துள்ளார்.