இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவின் பந்து வீச்சினால் எதிரணி நிலைகுலையும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெப் தொம்சன் கூறியுள்ளார்.

புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

பும்ரா உண்மையிலேயே சிறந்த பந்து வீச்சாளராக திகழ்கிறார், எதிரணியை நிலைகுலையச் செய்யும் வேகம் அவரிடம் உள்ளது. அவரது பந்துவீச்சை துடுப்பாட்ட வீரர்கள் சரிவர கணிப்பதில்லை.

இந்த உலகக் கோப்பையில் பும்ரா, தென்னாப்பிரிக்க அணி வீரர் ரபாடா ஆகியோரது ஆட்டத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். அதேபோல் அவுஸ்திரேலிய அணியின் மிச்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் முக்கிய இடத்தை வகிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.