பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை 21 ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்
கூடவுள்ளது. 

 இதன்படி இன்றைய பாராளுமன்ற அமர்வில்,  அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. 

மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நாட்டின் பாதுகாப்பின் மீது நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.