ஏப்ரல் தாக்குதலும் பொருளாதார வீழ்ச்சியும்

Published By: Digital Desk 3

21 May, 2019 | 09:46 AM
image

உலக பொரு­ளா­தார சிக்கல், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் நாட்டில் ஏற்­பட்ட அர­சியல் ஸ்திர­மற்ற நிலை கார­ண­மாக அண்மைக்­கால வீழ்ச்­சியிலிருந்து சற்றுத் தலை­தூக்­கிக் கொண்­டி­ருந்த இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஏற்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­குதல் பேரிடி­யாக அமைந்­துள்­ளது.

இந்த தாக்­கு­த­லினால் இலங்­கையின் பாரிய தொழில்துறை முதல் பெட்­டிக்­கடை வியா­பாரம் வரை நாளுக்கு நாள் வீழ்ச்­சி­ய­டைந்து வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அதே போல் நாட்­டு­மக்­களும் பொரு­ளா­தார ரீதி­யிலும் வாழ்­வா­தார ரீதி­யிலும் பாரிய இன்­ன­லுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றனர்.

இலங்­கையில் கடந்த மூன்று தசாப்த கால­மாக நில­விய உள்­நாட்டு யுத்­தத்தின் போது முகம் கொடுக்­காத பொரு­ளா­தார சிக்­க­லுக்கு நாடு தற்­போது முகம் கொடுத்து வரு­கின்­றது. இதற்கு காரணம் எமது நாடு சர்­வ­தேச பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­மை­யாகும். இந்­நிலை இலங்­கைக்கு குறு­கிய கால பொரு­ளா­தார தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதை போன்று நீண்ட காலத்­திற்கும் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது நிதர்­ச­ன­மான உண்­மை­யாகும்.

இந்த தாக்­குதல் சம்­ப­வ­மா­னது எதிர்­கா­லத்தில் இலங்­கையின் சென்­மதி நிலு­வையில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது.

வெளிநாட்­டுத்­துறை செயற்­பாட்டில் தாக்கம்

வெளிநாட்­டுத்­துறை செயற்­பா­டு­க­ளுக்கும் இதன் தாக்கம் நேர­டி­யாக உள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இது நீண்டகால அடிப்­ப­டையில் தாக்கம் செலுத்தும் ஒரு கார­ணி­யாகும். இலங்­கையின் ஏற்­று­மதி இறக்­கு­மதி கட்­ட­மைப்பை எடுத்து நோக்கும் போது ஏற்­று­ம­தியை விஞ்­சிய இறக்­கு­மதி செலவே பதி­வாகி வரு­கின்­றது. 

இவ்­வா­றான நிலையில் வளர்ச்­சி­ய­டைந்து வரும் பொரு­ளா­தா­ரத்தை கொண்ட எமது நாட்டில் எப்­பொ­ழுதும் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்கும் வகையில் உள்­நாட்டு உற்­பத்­தியை அதி­க­ரிப்­பதில் முனைப்­புக்­காட்­டப்­படும். 

இவ்­வா­றான நிலையில் தற்­போது நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் குழப்­ப­க­ர­மான சூழல் இலங்­கையில் ஏற்­று­ம­தியில் முத­லிடம் வகிக்கும் ஆடை உற்­பத்தி துறையின் உற்­பத்தி மட்­டத்தை பாதிக்கும் அபாயம் உரு­வா­கி­யுள்­ளது. ஏப்ரல் மாத தாக்­கு­த­லுக்குப் பின்னர் உரு­வா­கி­யுள்ள அச்ச நிலையினால் பல ஆடை உற்­பத்தி தொழிற்­சா­லைகள் இன்னும் தமது செயற்­பா­டு­களை ஆரம்­பிக்­க­வில்லை. மேலும் பல தொழிற்­சா­லை­களின் செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போதிலும் அங்கு ஊழி­யர்­களின் வருகை மிகக் குறைந்த மட்­டத்தில் காணப்­ப­டு­கின்­றது. இதனால் ஆடை உற்­பத்­தியில் வீழ்ச்சி ஏற்­பட்டு அதன் மூலம் கிடைக்கும் வரு­மா­னத்தை இழக்கும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது. 

ஆடை உற்­பத்தி ஏற்­று­ம­தி­யினால் கடந்த பெப்­ர­வரி மாதத்தில் மாத்­திரம் 465.6 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் இலங்­கைக்கு வரு­மா­ன­மாகக் கிடைத்­தி­ருந்­தது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு இதே காலப்­ப­கு­தியில் பதிவு செய்­யப்­பட்ட 407.0 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருடன் ஒப்­பி­டு­கையில் 14.4 சத­வீத அதி­க­ரிப்பை பதிவு செய்­துள்­ளது. அதே போல் இவ்­வ­ரு­டத்தின் ஜன­வரி மாதம் தொடக்கம் பெப்­ர­வரி மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் 941.5  மில்­லியன் அமெ­ரிக்க டொலர் ஆடை உற்­பத்தி ஏற்­று­ம­தி­யினால் வரு­மா­ன­மாக கிடைத்­துள்­ளது. இது கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் 11.8 சத­வீத வளர்ச்­சி­யாகும். 

இத்­த­ர­வு­களை வைத்து நோக்கும் போது கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் இவ்­வாண்டு இலங்­கையின் ஆடை உற்­பத்தி துறை வளர்ச்சிப் போக்கில் நகர ஆரம்­பித்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. இவ்­வா­றான நிலையில் இந்த தாக்­கு­தலின் பின்னர் பாதிக்­கப்­பட்­டுள்ள ஆடை உற்­பத்தி துறை­யினால் எதிர்­வரும் காலத்தில் இதன் மூலம் கிடைக்கும் வரு­மானம் பாரிய அளவு குறை­வ­டையும் சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன. இது எதிர்­கா­லத்தில் வர்த்­தக நிலு­வையில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.

வெளிநாட்டு முத­லீ­டு­களின் தாக்கம்

இந்த தாக்­கு­தலை அடுத்து இலங்­கைக்­கான வெளிநாட்டு நேரடி முத­லீ­டுகள் கணிச­மான அளவு குறை­வ­டை­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. யுத்­தத்­திற்கு பின்னர் பல வெளிநாட்டு முத­லீட்­டா­ளர்கள் இலங்­கைக்கு படை­யெ­டுக்க ஆரம்­பித்து சேவைத்­துறை, கைத்­தொழில் துறை என பல துறை­களில் தமது முத­லீ­டு­களை மேற்­கொண்­டனர். இதனால் இலங்­கைக்கு கணி­ச­மான அளவு அந்­நிய செல­ாவணி கிடைத்து அந்­நிய செலா­வணி கையி­ருப்பு வீதமும் அதி­க­ரிக்க ஆரம்­பித்­தது. அதேபோல் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட நேரடி முத­லீ­டுகள் மூலம் இலங்­கையில் பல தொழில்­வா­ய்ப்­புக்கள் புதி­தாக உரு­வாகி வேலை­யற்­றி­ருந்­த இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்­கப்­பெற்று நாட்டின் வேலை­யில்­லாப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­கப்­பெற்­றது. மேலும் இந்த முத­லீ­டு­க­ளினால் உரு­வான கைத்­தொழில் மற்றும் சேவைத்­து­றை­க­ளினால் உள்­நாட்டு உற்­பத்­திக்கு கணி­ச­மாக பங்­க­ளிப்பு கிடைக்­கப்­பெற்­றது.

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் அசா­தா­ரன சூழ்­நிலை கார­ண­மாக புதிய முத­லீட்­டா­ளர்கள் இலங்­கைக்கு வரு­வ­தற்கு எந்த அளவு முனைப்பு காட்­டு­வார்கள் என்­பது கேள்­விக்­கு­றியே.

அதே போல் தற்­போது இலங்­கையில் முத­லிட்­டுள்­ள­வர்கள் இலங்­கையில் தமது முத­லீ­டு­களைத் தொடர்­வது தொடர்பில் இரு­முறை சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளனர். 

இவ்­வா­றான நிலை தொட­ரு­மானால் வெளிநாட்டு முத­லீ­டுகள் மூலம் நாட்­டுக்கு கிடைக்கும் பாரிய அள­வான அந்நிய செலா­வணி கிடைக்­காமல் போய் செலா­வணி கையி­ருப்பில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­துடன் அதன் கார­ண­மாக நாட்டில் பண­வீக்கம் மேலும் அதி­க­ரிப்­ப­தற்கு ஏது­வான கார­ணி­யாக அமையும். மேலும் இந்த முத­லீ­டுகள் மூலம் மறை­மு­க­மாக நன்­மை­ய­டையும் சிறு தொழிலில் முயற்­சி­யா­ளர்­களும் பாதிக்­கப்­ப­டுவர்.

அதே போல் இந்த முத­லீ­டுகள் மூலம் கைத்­தொழில் துறையில் மற்றும் சேவைத்­து­றையில் தொழில் வாய்ப்பை பெற்­றுள்ள பல்­லா­யி­ரக் ­க­ண­க்கா­ன­வர்­களின் எதிர்­கால தொழில் வாய்ப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­துடன் எதிர்­கா­லத்தில் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த முத­லீ­டு­களின் வாயி­லாக தொழில் வாய்ப்பை பெற­வி­ருந்த பல்­ல­ாயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­க­ளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்­காமல் போகக்­கூடும். இது இலங்­கையில் வேலை­யற்றோர் தொகை அதி­க­ரிப்­புக்கு ஏது­வாக அமையும்.

இலங்­கையில் வேலை­யற்றோர் தொகையில் தாக்கம்

இலங்­கையில் வேலை­யற்றோர் தொகை கடந்த வருடம் 4.4 சத­வீ­த­மாக காணப்­பட்ட நிலையில் யுத்தம் இடம் பெற்ற காலப்­ப­கு­தி­யான 2007ஆம்  ஆண்டை எடுத்து நோக்கும் போது அத்­தொகை 5.9 சத­வீ­த­மாக காணப்­பட்­டது. 2009 ஆம் ஆண்டு காலம் வரை அது 5 சத­வீ­தத்­திற்கு குறை­யாமல் காணப்­பட்­டது. அதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டதை அடுத்து அத்­தொகை 4 சத­வீ­தத்­திற்கு கீழி­றங்­கியே பாதி­வா­கி­வ­ரு­கின்­றதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இதன் அடிப்­ப­டையில் நோக்கும் போது யுத்­தத்­திற்கு பின்னர் இலங்­கைக்கு வந்த வெளிநாட்டு முத­லீ­டுகள் எமது நாட்­டுக்கு தொழில் வாய்ப்­பினை உரு­வாக்­கி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இவ்­வா­றான நிலையில் நாட்டின் அசா­தா­ரன நிலை இவ்­வாறே நீடித்து முத­லீ­டுகள் குறை­வ­டை­யு­மாயின் இலங்­கையில் வேலை­யில்லா தொகை பழைய நிலைக்கு திரும்பும். 

மேலும் அண்­மைக்­கா­ல­மாக பங்­குச்­சந்தை முத­லீ­டுகள் அரச முறிகள் மீதான முத­லீ­டு­க­ளிலும் வெளிநாட்­ட­வர்­களின் முத­லீட்டு நாட்டம் அதி­க­ரித்து காணப்­ப­ட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது.

தற்­போ­தைய நிலையில் இலங்­கையில் நீண்­ட­கால முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு வெளிநாட்­ட­வர்கள் எந்த அளவு முன்­வ­ரு­வார்கள் என்­பது கேள்­விக்­கு­றியே

பங்­குச்­சந்தை முத­லீட்டின் தாக்கம்

பங்­குச்­சந்தை முத­லீட்டை எடுத்து நோக்கும் போது ஒரு நாட்டின் ஸ்திரத்­தன்­மையை (பாது­காப்பு மற்றும் அர­சியல் ஸ்திரத்­தன்மை) அடிப்­ப­டை­யாக கொண்ேட வெளிநாட்­ட­வர்கள் முத­லீடு செய்வதற்கு முன்­வ­ருவர் இதன் படி எமது நாட்டில் அண்­மையில் ஏற்­பட்ட அர­சியல் மாற்­றத்­தினால் பங்­குச்­சந்­தை­யி­லி­ருந்து அதி­க­ள­வான வெளிநாட்டு முதலீ­டுகள் வெளியே­றி­ய­மையை அவ­தா­னிக்க முடிந்­தது. அதே போன்ற ஒரு நிலை­யைத்தான் எமது நாட்­டுப்­பங்­குச்­சந்­தையும் தற்­போது எதிர்­நோக்கி வரு­கின்­றது. இதனால் பங்­குச்­சந்­தையில் முத­லீ­டுகள் குறை­வ­டைந்து பங்­குச்­சந்­தையில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு தேவை­யான முத­லீடு கிடைக்­காமல் போய்­விடும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது.

அதே போன்றே அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளுக்­காக விநி­யோ­கிக்­கப்­படும் திறை­சேறி முறிகள் மற்றும் திறை­சேறி உண்­டி­யல்கள் மீது வெளிநாட்டு  முத­லீடு குறை­வ­டைந்து நாட்டின் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது.

சுற்­று­லாத்­து­றையின் தாக்கம்

இதே போன்றே இலங்­கைக்கு அந்­நிய செலா­வ­ணியை ஈட்­டித்­தரும் பிர­தான துறை­யாக சுற்­று­லாத்­துறை காணப்­ப­டு­கின்­றது. கடந்த பெப்­ர­வரி மாதத்தில் மாத்­திரம் 473 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக பதி­வா­கி­யி­ருந்த சுற்­று­லாத்­து­றை­யி­லி­ருந்­தான வரு­மானம் இவ்­வ­ரு­டத்தின் ஜன­வரி மற்றும் பெப்­ர­வரி மாதங்­களில் 932 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக பதி­வா­கி­யுள்­ளது.

இருப்­பினும் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­குதல் இலங்­கையின் சுற்­று­லாத்­து­றையை தலை கீழாக மாற்­றிப்­போட்­டுள்­ளது. இதனால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு பாரிய தாக்கம் ஏற்­பட்­டுள்­ளதை போன்று அத்­து­றையின் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் நன்­மை­ய­டைந்த பல தொழில் முயற்­சி­யா­ளர்­களின் எதிர்க்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

இந்த தாக்­கு­தலின் பின்னர் தற்­போது வரை சுற்­று­லாத்­து­றையின் வரு­மானம் 7.5 சத­வீத்தால் குறை­வ­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் இது எதிர்­கா­லத்தில் மேலும் அதி­க­ரிக்கும்.

இவ்­வா­றான நிலையில் சுற்­று­லாத்­து­றையில் இருந்து இவ்­வ­ருடம் எதிர்­பார்க்­கப்பட்ட 5 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் வரு­மான இலக்கு எட்­டாக்­க­னி­யா­கி­வி­டு­மா என்­பதே தற்­போ­துள்ள கேள்­வி­யாகும்.

இவ்­வா­றான செயற்­பா­டு­களின் தாக்கம் நாட்டின் மொத்த தேசிய உற்­பத்­தியில் பாதிப்பை ஏற்­ப­டுத்தி பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

மேலும் மேற்­கு­றிப்­பிட்ட கார­ணிகள் சென்­மதி நிலு­வையில் நேரடி பாதிப்பை ஏற்­ப­டுத்தி அந்­நிய செலா­வணி கையி­ருப்பை பாதிக்கும்.நாட்டின் பண­வீக்­கத்தை தீர்­மா­னித்தல், இறக்­கு­ம­தி­களை மேற்­கொள்­ளுதல், வெளிநாட்டு கடன் செலுத்தல் உள்­ளிட்ட முக்­கிய செயற்­பா­டு­க­ளுக்கு அந்­நிய செய­லா­வ­ணியின் கையி­ருப்பு தாக்கம் செலுத்­து­கின்­றது.கடந்த ஏப்ரல் மாத இறு­தியில் இலங்­கையில் அந்­நிய செலா­வணி கையி­ருப்பு 6.3 பில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக காணப்­பட்­டது. இத் தொகை  கடந்த வரு­டத்தில் இதே காலப்­ப­கு­தியில் காணப்­பட்ட 9பில்­லியன் அமெ­ரிக்க டொல­ருடன் பாரிய வீழ்ச்­சி­யாக பதி­வா­கி­யுள்ள நிலையில் இனி வரும் காலங்­களில் நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரன சூழ்­நிலை கார­ண­மாக இத் தொகை மேலும் வீழ்ச்­சி­ய­டையும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது.

இலங்கை வெளிநா­டு­களில் இருந்து பெற்­றுக்­கொண்ட கட­னுக்­காக இவ்வருடத்தில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலரை மீள செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான பின்புலத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவடையும் பட்சத்தில்  கடன் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்த முடியாமல் போய் கடன் தொகை அதிகரிப்பதுடன் அரசாங்கத்தின் இதர செயற்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் மேலும் அதிகளவான கடனை பெறவேண்டி ஏற்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும்.

எனவே நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தி உள்­நாட்டு, வெளிநாட்டு முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் முதல் கட­மை­யாகும். மேலும் குண்­டு­வெ­டிப்பை அடுத்து ஆங்­காங்கே அவ்­வப்­போது ஏற்­படும் வன்­முறை சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். அடிக்­கடி ஊர­டங்­குச்­சட்டம் அமுல்­­ப­டுத்­து­வ­தா­னது தேசிய உற்­பத்­தியின் வளர்ச்­சிக்கு நேரடித் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். அதே போன்­றுதான் வெளிநாட்­ட­வர்கள் மத்­தியில் அவ நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும். நாடு இயல்பு நிலைக்கு கொண்­டு­வந்து பாதிக்­கப்­பட்­டுள்ள துறை­களை மீளக்­கட்­டி­யெ­ழுப்ப துரித கதியில் செயற்­ப­டு­வது எதிர்­கா­லத்தில் ஏற்படவிருக்கும் பாரிய பொருளாதரா பின்னடைவை ஓரளவேனும் தவிர்க்க முடியும்.

எஸ். வினோத்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58