மாஓயா - நீர்கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1500 சிம் அட்டைகளை மீனவர்கள் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சிம் அட்டைகள் சாக்கு ஒன்றில் இருந்ததை மீன் பிடிக்கசென்ற சில இளைஞர்கள் அவதானித்துள்ளனர். 

குறித்த சிம் அட்டைகள் பாவிக்காத நிலையில் எதற்காக மறைத்துவைக்கப்பட்டிருந்தது என இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சிம் அட்டைகளுக்கு சொந்தமான தொலைபேசி நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கையை பெற்றுக்கொள்ளவதற்காக  நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.