(இராஜதுரை ஹஷான்)

 அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  நம்பிக்கையில்லா பிரேரணையை   முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடு என்று முஸ்லிம் மக்கள் ஒரு போதும் கருத வேண்டாம். தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்கிய ஒரு  நபருக்கே  நம்பிக்கையில்லா பிரேரணை  கொண்டு வரவுள்ளது. இவ்விடயத்தில் தேசிய பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என  பாராளுமன்ற உறுப்பிர்  மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஹெலிய அமைப்பின் காரியாலயத்தில் ,இன்று  திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொ:ண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 பொதுஜன பெரமுனவினர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக   நம்பிக்கையில்லா பிரேரணையை  பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள் என்று ஆளும் தரப்பினர்  இனவிரோதத்தை தூண்டி விட முயற்சிக்கின்றார்கள்.    

ஒரு  இனத்தை பழி தீர்க்கும் நோக்கில்  நம்பிக்கையில்லா பிரேரணை   சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை முஸடலிம் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.   ரிஷாட் பதியுதீன் போன்ற அரசியல்வாதிகளின்  முறையற்ற செயற்பாடே ஒட்டுமொத்த  முஸ்லிம் மக்களுக்கும் இன்று  பல  வழிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது .  தீவிரவாதத்தை முழுமையாக  இல்லாதொழிக்க வேண்டுமாயின்   தீவிரவாதிகளை பாதுகாத்தவர்கள் முதலில்  தண்டிக்கப்பட வேண்டும்.  என்றார்.