தாய்­லாந்தின் பெங்கொக் நகரில் கடந்த சனிக்­கி­ழமை ஆரம்­ப­மான தாய்­லாந்து பகி­ரங்க மெய்­வல்­லுனர் தொடரில் இலங்கை அணி ஒரு தங்கம், இரண்டு வெண்­க­லப் பதக்­கங்கள் உட்­பட மூன்று பதக்­கங்­களை சுவீகரித்துள்ளது.

அந்­த­வ­கையில் இன்று நடை­பெற்ற மக­ளி­ருக்­கான 400 மீற்றர் தடை­தாண்டல் ஓட்டப் போட்­டியில் இலங்கை வீராங்­க­னை­யான ஷியாமா முத­லி­டத்தை பெற்று தங்­கப்­ப­தக்­கத்தை வென்றார். 

ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் தடை­தாண்டல் ஓட்டப் போட்­டியில் கலந்து­கொண்ட இலங்கை வீர­ரான அசங்க லக்மால் மூன்றாமிடத்தை பெற்று வெண்­கலப் பதக்­கத்தை வென்­றெடுத்தார். 

மக­ளி­ருக்­கான நீளம் பாய்­தலில் 6.12 மீற்­றர்கள் தூரம் பாய்ந்த லக் ஷானி மூன்­றா­மி­டத்தைப் பெற்று வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

தொடரின் கடைசி நாளான நாளை 100 மற்றும் 110 தடை­தாண்டி ஓட்டப் போட்­டி­களில் இலங்கையின் லக்ஷிக சுகந்தி மற்றும் தம்­மிக்க ரண­துங்க ஆகியோர் போட்­டி­யி­ட­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.