(செ.தேன்மொழி)

றக்குவானை - எல்பிடிய பகுதியில் தந்தையால் தாக்கப்பட்டு மகனொருவர் உயிரிழந்துள்ளார்.  றக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிடிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தந்தை ஒருவருக்கும் , அவரது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியே மேற்படி உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மதுபோதையில் வீட்டுக்கு வந்த மகன் தந்தையுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதன் போது கோபமடைந்த தந்தை அவரது மகனை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த மகன் காவத்தை வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டதின் பின் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேக நபரான தந்தையை கைது செய்துள்ளதுடன்,  மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.