பருத்தித்துறை போக்கறுப்பு கேவில் கடலில் கரைவலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் படகிலிருந்து இறங்கி கரையிலுள்ள வாடிக்கு தேனீர் அருந்துவதற்காக சென்ற போது வலிப்பு ஏற்பட்டு கடலில் வீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்  கட்டைக்காடு முள்ளியானைப் பகுதியைச் சேரந்த 38 வயதுடைய கமலதாஸ் அமலதான் எனும் ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவரின் மரணம் தொடர்பில் பலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.