நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக செயற்படுவோர்  தேச துரோகிகள் -ரோஹித அபேகுணவர்தன 

Published By: Vishnu

20 May, 2019 | 03:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக செயற்படுவர்கள்  தேச துரோகிகளாகவே மக்களால் அடையாளப்படுத்தப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப்பெற்றாலும் , தோல்வியடைந்தாலும் அது ஐக்கிய  தேசிய கட்சிக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் அதாவது பிரேரணை வெற்றிப் பெற்றால்  ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக  செயற்படும் மேலும் 05  பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் இழக்கநேரிடும். இதனால்  ஆட்சி கவிழ்ப்பு  ஏற்படும்.

மறுபுறம் பிரேரணை தோல்வியடைந்தால் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தவர்களும்   மக்களால் தேசதுரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவார்கள்.  இதன்பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்  என்று  கருதும் அளவிற்கு  மக்கள்  பாடம் புகட்டுவார்கள்.

எதிர்தரப்பினர்  விடயத்தில் மாத்திரமே   பாதுகாப்பு துறையினர் முறையாக செயற்படுகின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான   பியல்  நிஷாந்த  சில்வா மற்றும்  தயாசிறி ஜயசேகர ஆகியோர்  விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். 

ஆனால் இதுவரையில்  நீதித்துறைக்கு அவப்பெயரினை ஏற்படுத்திய   மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி  மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக  இதுவரையில் எவ்வித  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09