நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருட்கள் மற்றும் மதுபான போத்தல்களுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சோதனை நடவடிக்கைகள்  அனுராதபுரம், மொரகாஹேன மற்றும் மாத்தறை  பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு அண்மித்த பகுதியில் 09 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் தலாவ பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுள்ளது.

மேலும், மொரகாஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஹட்டபிடிய பகுதியில் 02 கிராம் 10 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அதே பகுதியை சேர்ந்த 52 வயதுடை சந்தேக நபர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடகம பகுதியில் பொலிஸார் வேன் ஒன்றை சோதனைக்குட்படுத்திய போது 02 கிராம் 630 மில்லி கிராம்  ஹெரோயின் மற்றும் 02 மதுபான போத்தல்களுடன் 05 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் தெஹிவளை, கரன்தெனிய, ஹக்மன பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.