தும்மலசூரிய - ஹக்மன பகுதிகளில்  இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்து சம்பவங்கள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதம்பை – குளியாப்பிட்டிய வீதியில் குளியாப்பிட்டிய நோக்கி சென்ற லொரி அதன் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போது  பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்  உயிரிழந்தார்.

இவர் அலவ்வ பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சேனரத் பதிரனலாகே துசித்த குமார என்பவர் ஆவார். லொரி சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

மேலும்  ஹக்மன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 63 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹக்மன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலஸ்முல்ல - ஹக்மன வீதியில் வலஸ்முல்ல நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி ஹக்மன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்  உயிரிழந்தார்.

அவர் சூரியவெவ பகுதியை சேர்ந்த ரணசிங்க பியசேன என்பவர் ஆவார். பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.