கடந்த 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்தை தோற்கடித்து அவுஸ்திரேலியா கிண்ணத்தை தனதாக்கியது.

* இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை நடைபெற்றது. 

இதன் மூலம் இங்கிலாந்துக்கு வெளியில் உலகக் கிண்ணத்தை நடத்திய முதல் நாடுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பதிவாயின.

எனினும் ஐ.சி.சி.யின் ஆதிக்க சக்திகளாக இருந்த இங்கிலாந்து மற்று அவுஸ்திரேலியா ஆசிய கண்டத்தில் உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கு எதிர்ப்பின‍ை வெளிப்படுத்தின. எனினும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் தொடரை பாகிஸ்தான், இந்தியாவில் நடத்த இணக்கம் ஏற்பட்டது. 

இதுவே உலகக் கிண்ண போட்டிகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏனைய நாடுகளிலும் சுழற்சி முறையில் நடத்த  வழிவகுத்தது.

* 21 மைதானங்களில் இடம்பெற்ற இத் தொடரில் மொத்தம் 27 போட்டிகள் இடம்பெற்றன.

 

கிண்ணத்தின் பெயர் ரிலயன்ஸ் 

* ஒருநாள் கிரிக்கெட்டில் 60 ஓவர் என்ற வழக்கம் தகர்ந்து 50 ஓவராக மாற்றமடைந்தது.

இங்கிலாந்தைப் போலன்றி ஏனைய நாடுகளில் பகல் வேளை நீண்ட நேரம் நீடிக்காமை காரணமாகவே இந்த விதி மாற்றப்பட்டது.

* 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற 8 அணிகளும் இந்த போட்டித் தொடரிலும் விளையாடின.

குழு 'A' யில் இந்தியா, அவுஸ்திரேலியா, சிம்பாப்வே மற்றும் நியூஸிலாந்து. குழு 'B'யில் பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இலங்கை.

* லீக் சுற்றில் இடம்பெறும் 24 போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி அரையிறுதிக்குள் நுழையும்.

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் தலா ஒவ்வொரு போட்டி அடங்கலாக மொத்தம் இரு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A'யின் முதலாவது லீக் போட்டி : அவுஸ்திரேலியா - இந்தியா

அவுஸ்திரேலியா 270/6 (50 overs)

இந்தியா 269 (49.5 overs)

ஒரு ஓட்டத்தினால் இந்தியா வெற்றி

குழு 'B' யின் முதலாவது லீக் போட்டி : பாகிஸ்தான் - இலங்கை

பாகிஸ்தான் 267/6 (50 overs)

இலங்கை 252 (49.2 overs)

15 ஓட்டத்தினால் பாகிஸ்தான் வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி குழு 'B' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

குழு 'B' யின் இரண்டாவது லீக் போட்டி : மே.இ.தீவுகள் - இங்கிலாந்து

மே.இ.தீவுகள் 243/7 (50 overs)

இங்கிலாந்து 246/8 (49.3 overs)

2 விக்கெட்டுக்களினால் இங்கிலாந்து வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி குழு 'A' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

குழு 'A' யின் இரண்டாவது லீக் போட்டி : நியூஸிலாந்து - சிம்பாப்வே

நியூஸிலாந்து 242/7 (50 overs)

சிம்பாப்வே 239 (49.4 overs)

மூன்று ஓட்டத்தினால் சிம்பாப்வே வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி குழு 'A' யில் ஒரு லீக் போட்டியும், குழு 'B' யில் இரண்டு லீக் போட்டியும் இடம்பெற்றது.

குழு 'A' யின் மூன்றாவது லீக் போட்டி : ஆஸி. - சிம்பாப்வே

அவுஸ்திரேலியா 235/9 (50 overs)

சிம்பாப்வே 139 (49.4 overs)

96 ஓட்டத்தினால் அவுஸ்திரேலியா வெற்றி

குழு 'B' யின் மூன்றாவது லீக் போட்டி : பாகிஸ்தான் - இங்கிலாந்து

பாகிஸ்தான் 239/7 (50 overs)

இங்கிலாந்து 221 (48.4 overs)

18 ஓட்டத்தினால் பாகிஸ்தான் வெற்றி

குழு 'B' யின் நான்காவது லீக் போட்டி : மே.இ.தீவுகள் - இலங்கை

மே.இ.தீவுகள் 360/4 (50 overs)

இலங்கை 169/4 (50 overs)

191 ஓட்டத்தினால் மே.இ.தீ.வுகள் வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி குழு 'A' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

 

குழு 'A' யின் நான்காவது லீக் போட்டி : இந்தியா - நியூஸிலாந்து

இந்தியா 252/7 (50 overs)

நியூஸிலாந்து 236/8 (50 overs)

16 ஓட்டத்தினால் இந்தியா வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி குழு 'B' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

குழு 'B' யின் ஐந்தாவது லீக் போட்டி : மே.இ.தீவுகள் - பாகிஸ்தான்

மே.இ.தீவுகள் 216 (50 overs)

பாகிஸ்தான் 217/9 (50 overs)

ஒரு விக்கெட்டினால் பாகிஸ்தான் வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் தலா ஒவ்வொரு லீக் போட்டி அடங்கலாக மொத்தம் இரு போட்டிகள் இடம்பெற்றது.

 

குழு 'A' யின் ஐந்தாவது லீக் போட்டி : சிம்பாப்வே - இந்தியா

சிம்பாப்வே 135 (44.2 overs)

இந்தியா 136/2 (27.5 overs)

8 விக்கெட்டுக்களால் இந்தியா வெற்றி

குழு 'B' யின் ஆறாவது லீக் போட்டி : இங்கிலாந்து - இலங்கை

இங்கிலாந்து 296/4 (50 overs)

இலங்கை 158/8 (45 overs)

108 ஓட்டத்தினால் இங்கிலாந்து வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி குழு 'A' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

குழு 'A' யின் ஆறாவது லீக் போட்டி : அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து

அவுஸ்திரேலியா 199/4 (30 overs)

நியூஸிலாந்து 196/9 (30 overs)

3 ஓட்டத்தினால் அவுஸ்திரேலியா வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி குழு 'B' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

குழு 'B' யின் ஏழாவது லீக் போட்டி : இங்கிலாந்து - பாகிஸ்தான்

இங்கிலாந்து 244/9 (50 overs)

பாகிஸ்தான் 247/3 (49 overs)

7 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி குழு 'B' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

குழு 'B' யின் எட்டாவது லீக் போட்டி : மே.இ.தீவுகள் - இலங்கை

மே.இ.தீவுகள் 236/8 (50 overs)

இலங்கை 211/8 (50 overs)

25 ஓட்டத்தினால் மே.இ.தீவுகள் வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி குழு 'A' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

குழு 'A' யின் ஏழாவது லீக் போட்டி : இந்தியா - அவுஸ்திரேலியா

இந்தியா 289/6 (50 overs)

அவுஸ்திரேலியா 233 (49 overs)

56 ஓட்டத்தினால் இந்தியா வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி குழு 'A' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

குழு 'A' யின் எட்டாவது லீக் போட்டி : சிம்பாப்வே - நியூஸிலாந்து

சிம்பாப்வே 227/5 (50 overs)

நியூஸிலாந்து 228/6 (47.4 overs)

4 விக்கெட்டுக்களால் நியூஸிலாந்து வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி குழு 'B' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

குழு 'B' யின் ஒன்பதாவது லீக் போட்டி : பாகிஸ்தான் - இலங்கை

பாகிஸ்தான் 297/7 (50 overs)

இலங்கை 184/8 (50 overs)

113 ஓட்டத்தினால் பாகிஸ்தான் வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் தலா ஒவ்வொரு லீக் போட்டி அடங்கலாக மொத்தம் இரு போட்டிகள் இடம்பெற்றது.

குழு 'A' யின் ஒன்பதாவது லீக் போட்டி : சிம்பாப்வே - இந்தியா

சிம்பாப்வே 191/7 (50 overs)

இந்தியா 194/3 (42 overs)

குழு 'B' யின் பத்தாவது லீக் போட்டி : இங்கிலாந்து - மே.இ.தீவுகள்

இங்கிலாந்து 297/7 (50 overs)

மே.இ.தீவுகள் 235 (48.1 overs)

34 ஓட்டத்தினால் இங்கிலாந்து வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி குழு 'A' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

குழு 'A' யின் பத்தாவது லீக் போட்டி : ஆஸி. - நியூஸிலாந்து

அவுஸ்திரேலியா 251/8 (50 overs)

நியூஸிலாந்து 234 (48.4 overs)

17 ஓட்டத்தினால் அவுஸ்திரேலியா வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி குழு 'A'யில் ஒரு லீக் போட்டியும், குழு 'B' யில் இரு லீக் போட்டிகளும் அடங்கலாக மொத்தம் இரு போட்டிகள் இடம்பெற்றது.

குழு 'A' யின் பதினொறாவது லீக் போட்டி : ஆஸி. - சிம்பாப்வே

அவுஸ்திரேலியா 266/5 (50 overs)

சிம்பாப்வே 196/6 (50 overs)

70 ஓட்டத்தினால் அவுஸ்திரேலியா வெற்றி

குழு 'B' யின் பதினொறாவது லீக் போட்டி : இலங்கை - இங்கிலாந்து

இலங்கை 218/7 (50 overs)

இங்கிலாந்து 219/2 (41.2 overs)

8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து வெற்றி

குழு 'B' யின் பன்னிரெண்டாவது லீக் போட்டி : மே.இ.தீவுகள் - பாக்கிஸ்தான்

மே.இ.தீவுகள் 258/7 (50 overs)

பாகிஸ்தான் 230/9 (50 overs)

28 ஓட்டத்தினால் மே.இ.தீவுகள் வெற்றி

 • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி குழு 'A' யில் ஒரு லீக் போட்டி இடம்பெற்றது.

குழு 'A' யின் பன்னிரெண்டாவது லீக் போட்டி : நியூஸி. - இந்தியா

நியூஸிலாந்து 221/9 (50 overs)

இந்தியா 224/1 (32.1 overs)

9 விக்கெட்டுக்களால் இந்தியா வெற்றி

 • லீக் ஆட்டம் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் குழு 'A' யில் இந்தியா, அவுஸ்திரேலியாவும், குழு 'B'யில் பாகிஸ்தான், இங்கிலாந்தும் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

1987 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டி : அவுஸ்திரேலியா - பாகிஸ்தான்

அவுஸ்திரேலியா 267/6 (50 overs)

பாகிஸ்தான் 249 (49.2 overs)

18 ஓட்டத்தினால் பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்திரேலியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

1987 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டி : இங்கிலாந்து - இந்தியா

இங்கிலாந்து 254/6 (50 overs)

இந்தியா 219 (45.3 overs)

35 ஓட்டத்தினால் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

1987 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆலன் பார்டர் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 7 ஓட்டங்களினால் மைக் கேட்டிங் தலைமையிலான இங்கிலாந்தை சாய்த்து முதல் தடவையாக உலகக் கிண்ணத்துக்கு முத்தமிட்டது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் டி.சி.பூன் 75 ஓட்டத்தையும், வெலட்டா 45 ஓட்டத்தையும் அதிகப்படியாக எடுத்தனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஹெம்மிங்க்ஸ் 2 விக்கெட்டுக்களையும், பொஸ்டர் மற்றும் கூச் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

254 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை எடுத்து 7 ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்தது. 

இறுதி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 17 ஓட்டம் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் இங்கிலாந்து அணியால் 10 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது. 

இங்கிலாந்து அணி சார்பில் சி.டபிள்யு.ஜே. அதி 58 ஓட்டத்தையும், மைக் கேட்டிங் 41 ஓட்டத்தையும், ஏ.ஜே.லாம்ப் 45 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் ஏ.ஆர். போர்டர் மற்றும் வோக்ஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஓ'டோனெல் மற்றும் கிரேக் மெக்டர்மோட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

* போட்டியின் ஆட்டநாயகன் -அவுஸ்திரேலியாவின் டேவிட் பூன்

*  அதிக ஓட்டம் - இங்கிலாந்தின் கிரகாம் கூச் ( 8 போட்டிகளில் 471 ஓட்டம்)

*  அதிக விக்கெட்டுகள் - அவுஸ்திரேலியாவின் கிரேக் மெக்டர்மோட் ( 8 போட்டிகள் 18 விக்கெட்)

*  முதல் ஹெட்ரிக் - இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் ஷர்மா 

(உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் சேத்தன் ஷர்மா பெற்றார். இந்த உலகக் கிண்ண போட்டியில் நாக்பூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 42 வது ஓவரில் அவர் ரூதர் போர்ட், இயான் சுமித், இவான் சாட்பீல்டு ஆகிய வீரர்களை போல்ட் முறையில் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க செய்தார்.)

‍தொகுப்பு : ஜெ.அனோஜன்