மோடியும் 17 மணிநேர தியானமும்!

Published By: Vishnu

20 May, 2019 | 12:12 PM
image

கேதார்நாத் கோவிலைத் தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழிபட்ட அவர் கடவுளிடம் எதுவும் கேட்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய பொதுத் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்குச் சென்றார். 

கோவிலின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ததுடன் கோவிலை வலம் வந்தார். கோவிலின் பகுதியில் நடந்து வரும் நிர்மாணப் பணிகளை ஆய்வு செய்தார். கோவிலின் அருகே உள்ள ஒரு புனிதக் குகையில் 17 மணிநேர தொடர் தியானத்திலும் ஈடுபட்டார். 

பின்னர் நேற்றுக் குகையிலிருந்து வெளியேறிய இந்தியப் பிரதமர் மோடி, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்தக் கோவிலுக்கு பல தடவைகள் வரும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றுள்ளேன்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருந்தாலும் இங்கு வருவதற்கு எனக்கு அனுமதி வழங்கிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். தேர்தல் பணிகள் இடம்பெற்று வரும்போது ஊடகவியலாளர்கள் இங்கு வந்திருப்பது. இந்தக் கோவில் நகரம் வளர்ச்சியடைந்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.

சுவாமி தரிசனத்தின்போது கடவுளிடம் நான் எதுவும் கேட்க்கவில்லை. அது என் பழக்கமும் இல்லை. கடவுள் எங்களுக்கு கிடைக்கும் கொடுக்கும் திறனையே கொடுத்திருக்கின்றார். கேட்க்கும் திறனையல்ல. 

இந்தியாவுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மகிழ்ச்சி, வளமை, நல்வாழ்வு ஆகியவற்றை வாழங்க கடவுள் அருள்புரியட்டும் என்றார்.

பின்னர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மற்றுமோர் புகழ்பெற்ற ஆன்மீகத் தழமான பத்ரிநாத் கோவிலுக்கும் இந்தியப் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். 

இதேவேளை இந்தியப் பிரதமர் மோடி கேதார் நாத் மற்றும் பத்ரிநாத் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த விவகாரம் மற்றும் இதன்போது கேதார் நாத் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளை மோடி பார்வையிட்டு, ஆய்வு செய்தது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயற்பாடு என மேற்வங்கள முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் மோடியின் கேதார்நாத் கோவில் விஜயத்துக்கு இந்திய தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45