அஜித்குமார் இப்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தையடுத்து அஜித்குமாரை வைத்து மேலும் மூன்று புதிய படங்களை தயாரிக்க போனி கபூர் திட்டமிட்டிருக்கிறார். இதை போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நோர்கொண்ட பார்வையடுத்து அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேறு ஒரு பட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதேபோல் அஜித்தை வைத்து இன்னொரு படைத்தை தயாரிக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் முன்வந்துள்ளது. 

அஜித் கால்சீட் யாருக்கு கொடுப்பார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.