ஒரு பிரச்­சி­னையை கையாள வேண்­டு­மாயின் அதனை ஏற்­றுக்­கொள்ளும் போதே (Acceptance)  அந்த தாக்­கத்­துடன் தொடர்­பு­டைய பாதிப்­பினை (நஷ்­டத்தை) நம்மால் இனங்­கா­ணக்­கூ­டி­ய­தாக இருக்கும். அனை த்து நிறு­வ­னங்­களும், தொழில் செய்­ப­வர்­களும் இந்த உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தொடர் குண்டுத் தாக்­கு­தலால் அடைந்த மற்றும் அடை­யப்­போகும் இழப்­பினை முதலில் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். 

இந்த இழப்­பா­னது நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ தற்­போது மட்­டுமல்லாது இனிவரும் காலங்­க­ளிலும் ஏற்­ப­டப்­போகும் இழப்­பினை உள்­ள­டக்கும். அதன் பின்­னரே பிரச்­சி­னையால் ஏற்­பட்ட இழப்­பினை பொது­வான ஒரு அள­வீட்டின் மூலம் கணிப்­பிட முடியும்.  இதனை பின்­வ­ரு­மாறு அள­விட முடியும். 

நிறு­வ­னங்கள் முன்­கூட்­டியே தயா­ரித்த உள்­ளக ரீதி­யி­லான வரவு–செலவுத் திட்டத்தின் (INTERNAL BUDGET) மூலம் அவர்கள் அடைந்த நஷ்­டத்­தினை அறி­யலாம். இதன் போது உண்மைத் தர­வு­க­ளையும் வரவு–செலவுத் திட்டத்தின் தர­வு­க­ளையும் ஒன்­று­ப­டுத்தி அடைந்த மற்றும் அடை­யப்­போகும் இழப்­பினை இனங்­கா­ணலாம். செல­வு­களை ஈடு செய்­யக்­கூ­டிய வரு­மானம் கிடைக்­கப்­பெ­றா­மை­யினால் நஷ்டம் ஏற்­படும். 

மேலும் இவற்றை நாட்டின் பண­வீக்கம், பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் என்­ப­வற்றில் ஏற்­ப­டுத்தும் தாக்­கத்தைக் கொண்டும் கணிப்­பி­டலாம். பொது­வாக பெரிய நிறு­வ­னங்­களில் இம்­முறை பெரிதும் சாத்­தி­யப்­படும். ஆனால் சில சிறிய மற்றும் நடுத்­தர தொழில் செய்வோர் உள்­ளக ரீதி­யி­லான வரவு–செலவுத் திட்டத்தினை அவ்­வ­ள­வாக நடை­முறை செய்­யா­த­வி­டத்து ஓர­ளவு உத்­தேச அடிப்­ப­டையில் (FORECASTED & PROJECTED MECHANISM) இல­கு­வாக இதனை செய்யக் கூடி­ய­தாக இருக்கும். முக்­கி­ய­மாக நிறு­வ­னத்தின் நிலை­யான அசையும் மற்றும் அசையாச் சொத்­துக்­க­ளுக்கு ஏற்­பட்ட நஷ்­டமே அந்­நி­று­வ­னத்­துக்கு பாரிய தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தும். நிறு­வ­னங்கள் வாடிக்­கை­யா­ளர்கள் மூலமும் தமது இழப்­பினை கணிப்­பிட முடியும். 

தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுடன் தொடர்ச்­சி­யான கொடுக்கல் வாங்கல் முறை, இந்த குண்டுத் தாக்­கு­தலால் ஏற்பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லை­யினால் நிறு­வ­னங்­களில் சில சமயம்  இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கலாம். சுற்­று­லாத்­துறை, உண­வ­கங்கள் மற்றும் கைத்­தொழில் புரிவோர் அனை­வ­ரது கொடுக்கல், வாங்கல் செயற்­பா­டுகளும் தாம­திக்­கப்­படும். மற்றும் வாடிக்­கை­யா­ளர்­களின் கொள்­வ­னவு சக்தி குறை­வ­டைந்து காணப்­படும். இதனால் நேர­டி­யான செல­வைக்­கூட ஈடு செய்ய முடி­யாமல் காணப்­ப­டுவர். எனவே நிறு­வ­னங்கள் (WORKING CAPITAL) குறு­கிய கால நிதி நெருக்­க­டி­யினை முகங்­கொ­டுக்க நேரிடும். இந்த சவா­லினை நிறு­வ­னங்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் கையாள­ வேண்டும். நிறு­வ­னங்கள் தமக்கு தேவை­யான விற்­பனை பொருட்­களை பெற்­றுக்­கொள்­வதில் ஏற்­படும் தாக்­கத்தின் மூலமும் இழப்­பினை கணிப்­பிட முடியும். 

பொது­வாக நிறு­வ­னங்கள் தமது வியா­ப­ாரத்­திற்கு தேவை­யான பொருட்­க­ளினை உள்ளூர் வழங்கல் வாயி­லா­கவோ அல்­லது இறக்­கு­மதி முறை­யிலோ அல்­லது இவ்­வி­ரண்டின் வாயி­லா­கவோ பெற்­று­வ­ரு­வ­தனை அவ­தா­னிக்க முடியும். எனவே இந்­நி­று­வ­னங்­களின் உள்ளூர் வழங்­கு­நர்­க­ளுக்கு ஏதா­வது பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்பின் நிச்­ச­ய­மாக நேர­டி­யான தாக்­கத்­தினை சந்­திக்க நேரிடும். அதேபோல் இறக்­கு­ம­தியில் ஏற்­படும் தாம­தமும் நேர­டி­யான தாக்­கத்­தினைக் கொண்­டு­வரும்.  துல்­லி­ய­மான கணிப்பின் மூலம் ஏற்­ப­டப்­போகும் நேரடி மற்றும் மறை­முக நஷ்­டத்­தினை அள­வி­டுதல் அவ­சி­ய­மாகும். இலங்கை ரூபாவின் பெறு­ம­தியில்  ஏற்­படும் மாற்­றமும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். 

கடந்த காலங்­களில் எம் இலங்கை ரூபாவின் பெறு­ம­தி­யா­னது அமெ­ரிக்­காவின் டொல­ரிற்கு நிக­ராக பெரும் சரி­வினை சந்­தித்­தது. மேலும் உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்­கு­தலால் இது மேலும் பாரிய தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே நிறு­வ­னங்கள் இனி­வரும் காலங்­களில் ரூபாவின் பெரு­ம­திப்­பினை துல்­லி­ய­மாக கணிப்­பி­டு­தலின் மூலமே நாணய மாற்­றினால் ஏற்­ப­டப்­போகும் தாக்­கத்­தினை  ஓர­ளவு சமா­ளிக்க முடி­யு­­மாக இருக்கும்.

நிறு­வ­னங்கள் ஏற்­று­மதி வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு வரு­மாயின் அதனை மிகவும் அவ­தா­னத்­துடன் கையா­ள­வேண்டும். ஏனெனில் ஏற்­று­ம­திக்­கான (DEAD LINES) கால எல்­லை­யினை எவ்­வாறு அடை­வது என்­பதை மிகவும் கவ­னத்­துடன் திட்­ட­மிடல் வேண்டும். வேறு­வ­ழி­களில் விற்­பனை செய்தல் மற்றும் கால எல்­லை­யினை புதிப்­பித்தல் போன்ற மாற்று வழி­களின் மூலமே ஏற்­ப­டப்­போகும் தாக்­கத்­தினை  வெற்­றி­கொள்ள முடியும்.

அடுத்­த­தாக சுற்­றாடல் மாற்­றத்­தினால் ஏற்­பட்ட நஷ்டம். உதா­ர­ண­மாக ஊர­டங்கு சட்டம் பிறப்­பிக்­கப்­படும் சம­யத்தில் அனைத்து கொடுக்கல் வாங்கல் செயற்­பா­டு­களும் முற்­றாக இடை நிறுத்­தப்­படும், மாலை நீண்ட நேர வியா­பாரத் தன்மை குறை­வ­டையும். நீண்ட தூர பொருள் விநி­யோகம் தடைப்­படும். கடந்த 10  பத்து வரு­டங்­க­ளாக இயல்பு வாழ்­விற்கு பழ­கிய மக்கள் திடீ­ரென பெரும் மாற்­றத்­திற்கு உள்­ளாகும் போது தொழில் நிறு­வ­னங்­களும் இதனை முகங்­கொ­டுக்க வேண்­டியே வரும்.  இத­னையே ENVIRONMENTAL IMPACT  என அழைப்பர். எனவே எந்த ஒரு நிறு­வ­னமும் சிறந்த திட்­ட­மிடல் மற்றும் அத்­திட்­டத்­தினை சிறந்த முறையில் அமுல்­ப­டுத்­து­வதன் மூலமே நீண்­ட­கால இலக்­கினை (LONG TERM GOAL ACHIEVEMENT) அடை­ய­மு­டியும்.

அரசின் கொள்கை மாற்­றங்கள் தொடர் குண்டுத் தாக்­கு­த­லின்பின் இலங்கை அர­சா­னது சில திட்­ட­மிடல் கொள்­கை­களை அமுல்­ப­டுத்­தி­யுள்­ள­தோடு இன்னும் பல திட்­டங்­களை செயற்­ப­டுத்­தவும் இருக்­கின்­றது. ஆகவே சிறிய மற்றும் நடுத்­தர தொழில் புரிவோர் இதனை கருத்­திற்­கொண்டு இதன் மூலம் கிடைக்­கப்­பெறும் அனு­கூ­லத்­தினை பயன்­ப­டுத்த முயற்­சிக்க வேண்டும். உதா­ர­ண­மாக வட்­டி­யில்லா கடன் மற்றும் குறைந்த வட்­டி­யி­லான கடன் கொள்­கைகள் மக்­களின் குறு­கிய மற்றும் நீண்ட கால நிதிப்­பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்­து­கொள்ள உதவும்.

இலங்­கையில் சிறிய மற்றும் நடுத்­தர தொழில் செய்வோர் தமது சேமிப்­பினால் உரு­வாக்­கப்­பட்ட கைமூ­ல­த­னத்­தையும், மேல­தி­க­மாக வங்கிக் கட­னையும் பெற்று தமது சுற்­று­லாத்­துறை வரு­மா­னத்தை நம்­பியே தொழில் முயற்­சியில் ஈடு­பட்­டு­வந்­தனர். அது­மட்­டு­மன்றி சிறிய மற்றும் நடுத்­தர தொழில் புரிவோர் நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ சுற்­று­லாத்­து­றையில் தமது தொழில் முயற்­சியை ஈடு­ப­டுத்தி வந்­தனர்.

“நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் 3.5 வீதத்­துக்கும் 4 வீதத்­துக்கும் இடையில் அமையும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும்  அசா­தா­ரண சம்­ப­வத்­தினால் பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் குறை­வ­டை­யலாம் என மத்­திய வங்­கியின் ஆளுநர் இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி   தெரி­வித்­துள்ளார். வரும் காலங்­களில் தொழில்  நிறு­வ­னங்கள் மற்றும் மக்­க­ளுக்கு இது பெரும் தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தும். 

இந்த அசா­தா­ரண சூழ்­நி­லை­க­ளினால் நாட்டில் ஏற்­பட்­டுள்ள பண­வீக்­கத்­தினை  நாம் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. பண­வீக்க வீத­மா­னது நாளுக்கு நாள் படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து செல்லும்  போக்­கினை வரை­ப­டத்தின் மூலம் அவ­தா­னிக்­கலாம்.

கடந்த சில காலங்­க­ளில் நமது நாட்டின் வேலை­யின்மை வீதம் படிப்­ப­டி­யாக குறைந்து சிறந்த தொலை­நோக்­கத்­தினை அடையும் பாதையில் சென்று கொண்­டி­ருந்­தது. எனினும் இந்த அசா­தா­ரண நிலைமை அதற்கும் ஒரு இடை­யூ­றாக அமைந்­தி­ருக்­கின்­றது. கடந்த இரு வாரங்­களில் சுற்­று­லாத்­துறை சார்ந்த Hotel துறையில் வேலை செய்வோர் தமது வேலை­வாய்ப்­பினை இழந்து வரு­கின்­றனர். இதன் மறை­மு­க­தாக்­க­த்தை சுற்­று­லாத்­துறை சார்ந்த தொழில் வாய்ப்­பிலும் இனி­வரும் காலங்­களில் அவ­தா­னிக்க கூடி­ய­தாக இருக்கும். எனவே வேலை­யின்மை வீதம் இனி­வரும் காலங்­களில் அதி­க­ரித்தே காணப்­படும். இனி­வ­ரும்­கா­லங்­களில் இது இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தில் பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் வகையில் அமைந்­தி­ருக்­கின்­றது.

பங்­குச்­சந்­தை­யிலும் வியா­பா­ரத்­திலும் இந்த  தொடர் குண்டுத் தாக்­குதல் பாரிய தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.  இந்த பாரிய  வீழ்ச்­சி­யினை நாம்  எதிர்­வரும் நாட்­களில் பங்­குச்­சந்தை விலை சுட்­டெண்­களின் போக்கின் மூலம்  கணிப்­பி­டலாம். கடந்த சில வரு­டங்­க­ளாக அந்­நிய செலா­வணி முத­லீ­டா­னது சிறந்த முறையில் அமைந்­தி­ருந்­தது. ஆனால் இந்த  குண்டுத் தாக்­குதல் அந்­நிய முத­லீட்டில் பாரிய தாக்­கத்­தினை, அதிர்­வ­லையினை ஏற்­ப­டுத்தப் போவது திண்­ணமே. நாடு திட­மாக இல்­லா­ததால் அந்­நிய முத­லீடு பெரும் கேள்­விக்­கு­றி­யா­கவே அமை­யப்­போ­கின்­றது என்­பது நிச்­சயம்.

இலங்கை அர­சாங்க வரவு–செலவுத் திட்டத்தின் மூலம் நிய­மிக்­கப்­பட்ட கால எல்­லைக்குள் திட்­ட­மிட்ட மொத்த தேசிய மற்றும் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­களை அடை­யக்­கூ­டிய சாத்­தியம் குறை­வ­டையும், அத்­துடன் செலுத்த வேண்­டிய கட­னுக்­கான வட்டி வீதங்கள் அதி­க­ரிக்கும்.

அது­மட்­டு­மன்றி சேவை வழங்­கு­ப­வர்­களும் இந்த குண்­டுத்­தாக்­குதல் மூலம் நேர­டி­யாக மட்­டு­மல்லாது மறை­மு­க­மா­கவும் பாதிப்­ப­டைந்­துள்­ளனர். அதா­வது பாட­சா­லைகளில் கடந்த சில நாட்­க­ளாக தமது இரண்டாம் தவ­ணைக்­கான ஆரம்பம் பிற்­போ­டப்­பட்டு வந்­த­மை­யி­னாலும் பாட­சா­லைக்கு அரு­கிலும், அதனை சார்ந்து வியா­பாரம் செய்து வந்த சிற்­றுண்டி விற்­ப­னை­யா­ளர்கள், புத்­தக விற்­பனை செய்வோர் மற்றும் தெரு­வோர வியா­பா­ரிகள் மறை­மு­க­மாக பாதிப்­ப­டை­வ­தற்­கான சாத்­தி­யக்­கூறுகள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

எனவே இவ்­வா­றான அசா­தா­ரண சூழ்­நி­லை­க­ளில் எவ்­வாறு நெருக்­க­டியைத் தவிர்த்து நஷ்­டத்­தினை துல்­லி­ய­மாக அள­வீடு செய்­யலாம் என்­ப­தனை அறி­வதன் மூல­மாக செயற்­ப­டுத்­த­வேண்­டிய திட்­டத்தை ஒரு­மு­கப்­ப­டுத்தி அமுல்­ப­டுத்­தலாம். முக்­கி­ய­மாக இனி­வ­ரும் ­கா­லங்­க­ளிலும் எவ்­வாறு இந்த நஷ்­டத்­தினை ஈடு­செய்­ய­மு­டியும் என்­ப­தனை கவ­னத்தில் எடுத்­துக்­கொள்ள வேண்டும். உதா­ர­ண­மாக காப்­பு­றுதித்  திட்­டத்­தினை திட்­ட­மிட்டு செயலில் கொண்டு வருதல், இழந்த வரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகையில் மாற்று வழி­களில் எவ்­வாறு வியா­பா­ரத்தை நுட்­ப­மாக விரி­வு­ப­டுத்தி செல்­லலாம் போன்ற அள­வீ­டு­களை கவ­னத்தில் கொள்ளல் வேண்டும்.

ஒன்­றுக்கு மேற்­பட்ட வணிகத் துறையை தெரிவு செய்து வியா­பாரம் செய்­யலாம். இவ்­வாறு செய்யும் போது நாம் BRAKE EVAN POINT அதா­வது எந்த ஒரு அனர்த்­தத்­திலும் இலா­பமோ நஷ்­டமோ இல்­லாத நிலையில் வியா­பா­ரத்­தினை இல­கு­வாக நடத்­திக்­கொண்டு  செல்லக்  கூடி­ய­தாக அமையும்.  அதா­வது இலா­பமோ  நஷ்­டமோ இல்­லாத நிலையில் ஒரு துறையில் தாக்கம் ஏற்­பட்­டாலும் மற்­றைய துறை அதனை ஈடு செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்கும்.  மற்றும் தாக்­கத்தின் பின் ஏற்­படும் OPPORTUNITY- BOOM செயற்­பாட்டை திட்­ட­மிட்டு வெற்றி கொள்ள வேண்டும். துரித வியா­பா­ர யுக்­தி­களைக் கையாண்டு முன்நோக்­குடன் செயற்­பட்டு எதிர்ப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டும். SOMETHING IS BETTER THAN NOTHING என்­பது போல பின்­னோக்கி செல்­லாமல் புதிய வாய்ப்­புக்­களை உரு­வாக்கி அதன் மூலம் வெற்­றி­யினைக் காண­வேண்டும்.

மாற்று திட்­டங்­களை செய்யும் பொது கவ­னிக்க வேண்­டி­யவை

செய்­கின்ற திட்டம் ஏற்­க­னவே செயற்­ப­டுத்­திய திட்டத்துடன் ஒத்துசெல்கின்றதா என்று கவனிக்க வேண்டும். குறுகிய காலத்தில் திட்டத்தினை செயற்படுத்த  முயற்சி செய்தல் (அதாவது SHORT TERM – BULLET MEETING) போன்ற புதிய யுக்திகளை அமுல்படுத்தித் தரவுகளை பெற்று வித்தியாசம் ஏற்படின் அதனை அறிந்து எவ்வாறான மாற்றுத் திட்டத்தினை கையாள வேண்டும் என்பதை அறிய முடியும்.

எனவே வியாபாரத்திலும் சரி வாழ்க் கையிலும் சரி ஏற்ற இறக்கம் வருவது சகஜமாக இருப்பினும் அதனை தாங்கிக் கொள்ளும் மட்டத்தினுள் வைத்து (MINIMIZE THE RISK LEVEL WITHIN THE CONTROL LEVEL) அதனை சிறந்த திட்டமிடல் மூலம் வெற்றி கொள்ளும் போது நீண்ட கால இலக்கினை எம்மால் அடையமுடியும். 

இலங்கையரான நாம் கடந்த பல வருடங் கலாக பற்பல சவால்களுக்கு முகம் கொடு த்து அவற்றையெல்லாம் உடைத் தெறிந்து வெற்றியீட்டி வந்துள்ளோம். எனவே அந்த அனுபவத்தின் வாயிலாக இப்போது ஏற்பட்ட  இந்த குண்டுத் தாக்குதலால் அடைந்த சவாலினை வெற்றி கொள்ள முடியும் என்கின்ற POSITIVE APPROACH மூலம் முழு உலகத்திற்கும் ஒரு சிறந்த  உதாரணமாக வர முடியும்.

- சுவாமிநாதன் சர்மா

( பட்டயக்கணக்காளர்,வரி மற்றும் முகாமைத்துவ ஆலோசகர் )