(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 தொடர் தற்கொலை தாக்குதல்கள்  தொடர்பில், உளவுத் தகவல்கள் கிடைத்தும் அதனை முறையான விதத்தில் முகாமைத்துவம் செய்யாமை ஊடாக கடமையை சரி செய்யவில்லை என்பதை மையப்படுத்தி முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.  

குறித்த தொடர் தற்கொலை தாக்குதல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி நியமித்த உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன், முன்னாள் அமைச்சு செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரைக் கொண்ட  குழுவின்  இடைக்கால அறிக்கையை மையப்படுத்தி சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா இதற்கான ஆலோசனைகளை சி.ஐ.டி.க்கு வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.