பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். 

20 ரூபாவால் இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

வெங்காய உற்பத்தியாளர்களின் நலன்கருதியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.