சிவனடிபாதமலை பருவகாலம் இன்று பகல் 2:30 மணியளவில்  சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் பேராசிரியர் பிங்கமுவ தம்பதின்ன தேரர் தலைமையில் பிரித் ஓதும் வைபவத்துடன் நிறைவுக்கு வந்தது.

இதன் போது நோட்டன் மற்றும் லக்சபான இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர்களால் மலை உச்சியிலிருந்து புனித புத்த பகவானின் ஆபரணங்கள்

 மலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் நல்லத்தண்ணி பௌத்த மத்தியஸ்தானத்தில் வைக்கப்பட்டு பிரித் ஓதும் வைபவம் நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் சித்தாலேப நிறுவன பார ஊர்தியில் ஏற்றப்பட்டு லக்சபான வீதியூடாக பெரும் பாதுகாப்புடன் பெல்மடுள்ள கல்பொத்தாவெல ரஜ மகா விகாரைக்கு கொண்டு செல்ல உள்ளனர்.

இந்நிகழ்வில் மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.