ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இவ் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 11 நாட்கள் எஞ்சியியுள்ள நிலையில்  சர்வதேச கிரிக்கெட் பேரவை உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடல் ஒன்றை கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. 

”ஸ்டான்ட் பை” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பொப் பாடகி லோரின் மற்றும் ருடிமென்டல் ஆகியோர் இணைந்து பாடி அசத்தியுள்ளனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தூதர் அன்ட்ரூ பிளிண்ட்டொப், லாரின் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளதுடன், உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் காலம், கோடைக்காலம் என்பதால் காட்சியமைப்பும் அதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கிலாந்தில் உள்ள பன்முக கலாசாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் இந்த பாடல் உள்ளகியுள்ளதுடன், பாடல் வெளியான சிலமணி நேரங்களில், அது இணையதளங்களில் வைரலாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்தமுறை உலகக் கிண்ணத்தில் சம்பியனாகும் அணிக்கு வழங்கப்படுகின்ற பரிசுத் தொகையையும் ஐ.சி.சி. கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தகத்கது.