(ப.பன்னீர்செல்வம்)

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கைக்கு மீளப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் சுவீடன் வழங்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலங்கை வந்துள்ள சுவீடன் நாட்டு வெளிநாட்டமைச்சர் உறுதியளித்துள்ளார். 

வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகளின் தொழிற்பயிற்சிகளை மேம்படுத்த உதவுமாறு ஜனாதிபதி சுவீடன் நாட்டு வெ ளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உத்தியோகபூர்வ விஜயத்தை  மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள சுவீடன் நாட்டு வெ ளிவிவகார அமைச்சர் மார்கிரட் வொஸ்ஸ்ரோம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து உரையாற்றியபோதே ஜி.எஸ்.பி.யை மீளப் பெற்றுக் கொடுக்க ஆதரவு வழங்குமென்ற உறுதிமொழியை வழங்கியுள்ளார்.