அலரிமாளிகையில் வெசாக் வைபவம் இன்று மாலை 5.30ற்கு இடம் பெறவுள்ளது. அலரிமாளிகை வளாகத்தில் அமைந்துள்ள புத்தபெருமானின் சிலைக்கு அருகாமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது. 

அத்தோடு, மூன்று பீடங்களின் மஹாநாயக்கர்களின் தலைமையில் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி பிங்கம நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ள உள்ளார். 

மேலும், மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்குகொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படைவீரர்களுக்காகவும், உயிர்த்தெழுந்த ஞாயிறன்ற இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கானவும் பிரார்த்தனை வழிபாடும் இடமபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பிரதமர், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.