(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை மீண்டும் இல்லாமலாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

கொழும்பு கங்காராமை விகாரையில் வருடாந்தம் வெசாக் வலயம் அமைப்பதற்காக சேகரிக்கப்படும் நன்கொடை பணம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்குபற்றலுடன் கங்காராமை விகாரையில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனைத் தெரிவித்தார்.