1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி கிரிக்கெட் ஜாம்பவான்களான மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தியது.

* இங்கிலாந்தின் 15 மைதானங்களில் 1983 ஜூன் 9 முதல் ஜூன் 25 ஆம் திகதி வரை நடைபெற்றது.

* முதலாவது, இரண்டாவது உலகக் கிண்ணத்தைப் போலவே இதிலும் 8 அணிகள் கலந்துகொண்டன. ( குழு 'A' யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நிஸிலாந்து மற்றும் இலங்கையும், குழு 'B'யில் மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும்  சிம்பாப்வே)

* இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

* 16 நாட்கள் இடம்பெற்ற இத் தொடரில் 27 போட்டிகளில் இடம்பெற்றது.

* முதலாவது, இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரைப் போன்று 60 ஓவர்கள் என்ற அடிப்படையில் போட்டிகள் இடம்பெற்றன.

* இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் (Prudential Cup '83) என அழைக்கப்பட்டது.

* வெள்ளை நிற சீருடை, சிவப்பு நிற பந்தும் 

  • 1983 ஜூன் 9 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A' யின் முதல் லீக் போட்டி : இங்கிலாந்து - நியூஸிலாந்து

இங்கிலாந்து 322/6 (60 overs)

நியூஸிலாந்து 216 (59 overs)

இங்கிலாந்து 106 ஓட்டத்தனால் வெற்றி

குழு 'A' யின் இரண்டாவது லீக் போடி : பாகிஸ்தான் - இலங்கை

பாகிஸ்தான் 338/5 (60 overs)

இலங்கை 288/9 (60 overs)

பாகிஸ்தான் 50 ஓட்டங்களினால் வெற்றி

குழு 'B' யின் முதல் லீக் போட்டி : சிம்பாப்வே - அவுஸ்திரேலியா 

சிம்பாப்வே 239/6 (60 overs)

அவுஸ்திரேலியா 226/7 (60 overs)

சிம்பாவ்வே 13 ஓட்டத்தினால் வெற்றி

குழு 'B' யின் இரண்டாவது லீக் போட்டி : இந்தியா - மே.இ.தீவுகள்

இந்தியா 262/8 (60 overs)

மே.இ.தீவுகள் 228 (54.1 overs)

இந்தியா 34 ஓட்டத்தினால் வெற்றி

  • 1983 ஜூன் 11 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A' யின் மூன்றாவது லீக் போட்டி : இங்கிலாந்து - இலங்கை

இங்கிலாந்து 333/9 (60 overs)

இலங்கை 286 (58 overs)

இங்கிலாந்து 47 ஓட்டத்தினால் வெற்றி

குழு 'A' யின் நான்காவது லீக் போட்டி : நியூஸிலாந்து - பாகிஸ்தான்

நியூஸிலாந்து 238/9 (60 overs)

பாகிஸ்தான் 186 (55.2 overs)

நியூஸிலாந்து வெற்றி 52 ஓட்டத்தினால்

குழு 'B' யின் மூன்றாவது லீக் போட்டி : மே.இ.தீவுகள் - ஆஸி.

மே.இ.தீவுகள் 252/9 (60 overs)

அவுஸ்திரேலியா 151 (30.3 overs)

மே.தீ.வுகள் 101 ஓட்டத்தினால் வெற்றி 

குழு 'B' யின் நான்காவது லீக் போட்டி : சிம்பாப்வே - இந்தியா

சிம்பாப்வே 155 (51.4 overs)

இந்தியா 157/5 (37.3 overs)

இந்தியா 5 விக்கெட்டுக்களால் வெற்றி

  • 1983 ஜூன் 13 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A'யின் ஐந்தாவது லீக் போட்டி - பாகிஸ்தான் - இங்கிலாந்து 

பாகிஸ்தான் 193/8 (60 overs)

இங்கிலாந்து 199/2 (50.4 overs)

இங்கிலாந்து 8 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு 'A'யின் ஆறாவது லீக் போட்டி : இலங்கை - நியூஸிலாந்து

இலங்கை 206 (56.1 overs)

நியூஸிலாந்து 209/5 (39.2 overs)

நியூஸிலாந்து 5 விக்கெட்டுக்களினால் வெற்றி

குழு 'B' யின் ஐந்தாவது லீக் போட்டி : அவுஸ்திரேலியா - இந்தியா

அவுஸ்திரேலியா 320/9 (60 overs)

இந்தியா 158 (37.5 overs)

அவுஸ்திரேலியா 162 ஓட்டத்தினால் வெற்றி

குழு 'B' யின் ஆறாவது லீக் போட்டி : சிம்பாப்வே - மே.இ.தீவுகள்

சிம்பாப்வே 217/7 (60 overs)

மே.இ.தீவுகள் 218/2 (48.3 overs)

மே.இ.தீவுகள் 8 விக்கெட்டுகளினால் வெற்றி

  • 1983 ஜூன் 15 ஆம் திகதி 1983 ஜூன் 13 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் தலா ஒவ்வொரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A'யின் ஏழாவாது லீக் போட்டி :  இங்கிலாந்து - நியூஸிலாந்து

இங்கிலாந்து 234 (55.2 overs)

நியூஸிலாந்து 238/8 (59.5 overs)

நியூஸிலாந்தது 8 விக்கெட்டுக்களினால் வெற்றி

குழு 'B' யின் ஏழாவது லீக் போட்டியில் மே.இ.தீவுகள் - இந்தியா

மே.இ.தீவுகள் 282/9 (60 overs)

இந்தியா 216 (53.1 overs)

மே.இ.தீவுகள் 66 ஓட்டத்தினால் வெற்றி

  • 1983 ஜூன் 16 ஆம் திகதி 1983 ஜூன் 16 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் தலா ஒவ்வொரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A'யின் எட்டாவது லீக் போட்டி : பாகிஸ்தான் - இலங்கை

பாகிஸ்தான் 235/7 (60 overs)

இலங்கை 224 (58.3 overs)

பாகிஸ்தான் 11 ஓட்டத்தினால் வெற்றி

குழு 'B'யின் எட்டாவது லீக் போட்டி : அவுஸ்திரேலியா - சிம்பாப்வே

அவுஸ்திரேலியா 272/7 (60 overs)

சிம்பாப்வே 240 (59.5 overs)

அவுஸ்திரேலியா 32 ஓட்டத்தினால் வெற்றி

  • 1983 ஜூன் 18 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A'யின் ஒன்பதாவது லீக் போட்டி : பாகிஸ்தான் - இங்கிலாந்து

பாகிஸ்தான் 232/8 (60 overs)

இங்கிலாந்து 233/3 (57.2 overs)

இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு 'A'யின் பத்தாவது லீக் போட்டி : நியூஸிலாந்து - இலங்கை

நியூஸிலாந்து 181 (58.2 overs)

இலங்கை 184/7 (52.5 overs)

இலங்கை 3 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு 'B'யின் ஒன்பதாவது லீக் போட்டி : ஆஸி. - மே.இ.தீவுகள்

அவுஸ்திரேலியா 273/6 (60 overs)

மே.இ.தீவுகள் 276/3 (57.5 overs)

மே.இ.தீவுகள் 7 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு 'B'யின் பத்தாவது லீக் போட்டி : இந்தியா - சிம்பாப்வே

இந்தியா   266/8 (60 overs)

சிம்பாப்வே 235 (57 overs)

இந்தியா 31 ஓட்டத்தினால் வெற்றி

  • 1983 ஜூன் 20 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A'யின் பதினொறாவது லீக் போட்டி : இலங்கை - இங்கிலாந்து

இலங்கை 136 (50.4 overs)

இங்கிலாந்து 137/1 (24.1 overs)

இங்கிலாந்து 9 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு 'A'யின் பன்னிரெண்டாவது லீக் போட்டி : பாகிஸ்தான் - நியூ.

பாகிஸ்தான் 261/3 (60 overs)

நியூஸிலாந்து 250 (59.1 overs)

பாகிஸ்தான் 11 ஓட்டத்தால் வெற்றி

குழு 'B'யின் பதினொறாவது லீக் போட்டி : இந்தியா - ஆஸி.

இந்தியா 247 (55.5 overs)

அவுஸ்திரேலியா 129 (38.2 overs)

இந்தியா 118 ஓட்டத்தால் வெற்றி

குழு 'B'யின் பன்னிரெண்டாவது லீக் போட்டி : சிம்பாப்வே - மே.இ.தீவுகள்

சிம்பாப்வே 171 (60 overs)

மே.இ.தீவுகள் 172/0 (45.1 overs)

மே.இ.தீ.வுகள் 10 விக்கெட்டுகளால் வெற்றி

லீக் ஆட்டம் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் குழு 'A' யில் இங்கிலந்து, இந்திய அணியும், குழு 'B'யில் மேற்கிந்தியத்  தீவுகள், பாகிஸ்தான் அணியும் அரையிறுதிப் போட்டியில் நுழைந்தன.

  • 1983 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதி இரு அரையிறுதிப் போட்டிகளும் இடம்பெற்றன.

முதலாவது அரையிறுதிப் போட்டி : இங்கிலாந்து - இந்தியா

இங்கிலாந்து 213 (60 overs)

இந்தியா 217/4 (54.4 overs)

இந்தியா 6 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்று முதல் தடவையாக இறுதிச் சுற்றில் நுழைந்தது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி : பாகிஸ்தான் - மே.இ.தீவுகள்

பாகிஸ்தான் 184/8 (60 overs)

மே.இ.தீ.வுகள் 188/2 (48.4 overs)

மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று மூன்றாவது முறையாகவும் இறுதிச் சுற்றில் நுழைந்தது.

  • 1983 ஜூன் 25 ஆம் லோட்ஸ் மைதானத்தில் கிளைவ் லோயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணிக்கும் இறுதிப் போட்டி இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 38 ஓட்டங்களை எடுத்தார். 

வெற்றி இலக்கு ஓட்டம் குறைவு என்பதால் முதல் பாதி ஆட்டம் முடிந்ததுமே மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் வெற்றிக் கொண்டாட்டத்தை ஆரம்பித்தனர்.

எனினும் இந்திய அணித் தலைவர் அணி வீரர்களுக்கு அளித்த ஊக்கம் ஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்கும் என மே.இ.தீவுகள் அணியினர் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. 

கபில்தேவ் ஊக்குவித்த படி இந்திய அணியினர் சிறப்பக களத்தடுப்பை மேற்கொண்டு மே.இ.தீவுகள் அணியை 52 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்குள் ஆல்அவுட் ஆக்கினார்கள். 

இதனால் இந்திய அணி 43 ஓட்டத்தனால் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியதுடன், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அணியின் ஹெட்ரிக் கனவையும் கலைத்தது, கிரிக்கெட் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்திய அணி தரப்பில் மொகிந்தர் அமர்நாத், மதன்லால் தலா 3 விக்கெட்டுகளையும், பல்விந்தர் சந்து 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 

* போட்டியின் ஆட்டநாயகனான இந்திய வீரர் மொகிந்தர் அமர்நாத் 

* தொடரில் அதிக ஓட்டம் - இங்கிலாந்து அணியின் டேவிட் கவர் ( 7 போட்டிகள் 384 ஓட்டம்)

* தொடரில் அதிக விக்கெட்டுக்கள் - இந்திய அணியின் ரொஜர் பின்னி  (8 போட்டிகள் 18 விக்கெட்)

(தொகுப்பு : ஜெ.அனோஜன்)