மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது போல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் அதன் பிரதிபலிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

தற்கொலை தாக்குதல்களை அடுத்து பாதுகாப்புத்துறையினரின் உடனடிச் செயற்பாடுகள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அடுத்து நிகழாத வகையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எனினும் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அதிர்ச்சி விடயங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த விடயங்கள் பரஸ்பரம் உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனாலும் தீவிரவாதத்திற்கு எதிராக உள்நாட்டில் நடைபெறும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களும் இல்லாமலில்லை. குறிப்பாக, சில பகுதிகளை சோதனை செய்வதற்கு கூட முடியாத அளவிற்கு அரசியல் தலையீடுகள் இருப்பதாக கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ எம்.பி குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருக்கின்றார்.

போதுமான அதிகாரங்கள் பாதுகாப்புத்தரப்பிற்கு இல்லாதிருப்பதாக படைத்தரப்பு அதிகாரிகள் கூறிவருவதோடு, மேற்படி தாக்குதல் சம்பவங்களின் சூத்திரதாரிகளுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல் தரப்பினர் அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்கின்றமை விசாரணைகளில் நேர்த்தியான முடிவைப் பெறுவதற்கு தடையாக இருப்பதாக அதுரலிய ரத்தன தேரர் போன்றவர்கள் பகிரங்கமாகவே குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர்.

இதனைவிடவும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணை மற்றும் தொழில்நுட்ப ரீதியான செயற்பாடுகளில் அமெரிக்காவின் எப்.பி.ஐ, இன்டர்போல், ஸ்கொட்லாண்ட் யார்ட்ரூபவ் இஸ்ரேலின் மொசாட்ரூபவ் உட்பட எட்டு நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் பங்கேற்றுள்ளன. இவற்றின் செயற்பாடுகள் விசாரணைகளில் எத்தகைய தூரம் செல்வாக்களித்துள்ளன என்பதற்கான தகவல்கள் இதுவரையில் இல்லை.

இருப்பினும் இத்தகைய தரப்புக்களின் பங்கேற்பினை முன்னிலைப்படுத்தி “உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையீடு செய்கின்றது” என்ற பிரசாரத்தினை உள்நாட்டு அரசியலின் எதிர்த்தரப்புக்கள் கையில் எடுத்துள்ளதால் அத்தரப்புக்களுடன் பாதுகாப்புத்துறை கணிசமான இடைவெளியிலேயே செயற்பட வேண்டிய இக்கட்டான சூழலுக்குள் இருப்பதாக பாதுகாப்புத்துறையின் உயர்மட்டத்தரப்பினர் கூறுகின்றனர்.

இப்படியான நிலைமைகள் இருக்கையில்ரூபவ் இன்னமும் விடையில்லா வினாக்கள் இல்லாமில்லை. குறிப்பாகரூபவ் தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைவர் சஹ்ரான் தேவாலயங்களை குறிவைத்து பெரிய அளவில் தாக்குதல் சம்பவத்தை நடத்த சதித்திட்டம் தீட்டுவதாக இந்திய தேசிய புலனாய்வு குழுவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்ரூபவ் ஏப்ரல் 4ஆம் திகதியும்ரூபவ் 2ஆவது எச்சரிக்கை 20ஆம் திகதியும் பின்னர், சம்பவ தினமான ஞாயிறு அன்று காலையில் கூட 3ஆவது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னரே ஒரு மணி நேரத்தில் தொடர் குண்டு தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது. ஆகவே இந்த தகவல்கள் எவ்வாறு பரிமாறப்பட்டன. இவை குறித்து உடனடி செயற்பாடுகள் ஏன் எடுக்கப்படவில்லை. இத்தகவல்களைப் பெற்ற பொறுப்பதிகாரிகள் யார்? தற்போது இந்த விடயங்கள் சம்பந்தமாக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கேள்விகள் தொடர்கின்றன.

இந்த தகவல்கள் தங்களுடன் பகிரப்படவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் இராணுவம் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கும் என்று இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். பிறிதொரு தருணத்தில் தற்கொலைதாரிகளான சஹ்ரான் காசீம் தலைமையிலான குழுவினர் இந்தியாவில் பயிற்சி பெற்றதாகவும் 2018இல் தமிழ்நாடு, பெங்களுர், காஷ்மீர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயத்தில் சஹ்ரான் காசீம் இந்தியாவுக்கு சென்றமைக்கு வீசாரூபவ் கடவுச்சீட்டு என எந்தவிதமான உத்தியோகபூர்வமான பதிவுகள் இல்லை என்றும் தற்கொலைதாக்குதலில் ஈடுபட்ட இன்ஷாப், மற்றும் இல்ஹாம் ஆகிய சகோதரர்கள் உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினர் வர்த்தக தொடர்புகளை விசேடமாக கேராளவில் கொண்டிருந்தமையால் வர்த்தக விடயங்களுக்காக வணிக வீசாவில் 2012ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று திரும்பியுள்ளதாகவும் இந்திய இராஜதந்திர தரப்பில் உறுதிபடத் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறிருக்கையில் இராணுவத்தளபதியின் கூற்றுப்படி இந்தியாவை மையப்படுத்தியே தற்கொலைத் தாக்குதல்களுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டமைக்கான சான்றாதாரங்கள் காணப்படுமாயின் இந்த நொடி வரையில் பிராந்திய பாதுகாப்பில் கூட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் இந்திய தேசிய புலனாய்வுப் குழுவுடன் அதுபற்றி எந்தவிதமான விடயங்களும் பகிரப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

அதேநேரம் சஹ்ரான் தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்பில் முன்னெச்சரிக்கை செய்திருந்த இந்திய புலனாய்வுத்தரப்பு இத்தகைய பயிற்சி நடவடிக்கைகள் பற்றி அறிந்திருக்காது இருந்திருக்குமா என்ற கேள்வியும் இல்லாமில்லை.

ஒருவேளை, இராணுவத்தளபதியின் கூற்றின் பிரகாரம், சஹ்ரான் குழுவினர் இந்தியாவுக்கான பயணங்களை சட்டவிரோத அடிப்படையில் மேற்கொண்டிருப்பார்களாயின் தேசிய பாதுகாப்பு செயற்பாடுகளில் பாதுகாப்புத்துறையின் ‘நெகிழ்ச்சி தன்மையை’ அல்லவா சுட்டுவதாக இருக்கின்றது. அவ்வாறானால் நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறையில் பலவீனம் இருந்திருக்கின்றது என்ற வாதத்திற்கு இராணுவத்தளபதியின் கூற்று மேலும் வலுச்சேர்ப்பதாகி விடுகின்றது.

இதேவேளை சஹ்ரான் இரமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் வழியாக வந்துள்ளார் என்ற தகவலை தமிழக ஊடகவியாலாளர் ஒருவர் இந்திய தரப்புடன் நெருங்கிய தொடர்புகளை கொண்ட யாழில் உள்ள மூத்த செயற்பாட்டார் ஒருவருக்கு தெரிவித்ததாகவும் அந்த தகவலை புலனாய்வு மற்றும் பாதுகாப்பு தரப்புக்கு அறிவித்தவிட்டதாகவும் குறித்த செயற்பாட்டாளரே பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான கருத்துப்பரிமாற்றங்களுடன் ஒப்பிட்டு நோக்குகையில் வேறுதரப்புக்களால் புலானய்வு துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அவ்வாறு நோக்குகையில் இராணுவத்தளபதியின் மறுதலிப்பு கருத்துக்கள் இராணுவத்தின் பலவீனத்தை மறைக்க முனைகின்றாரோ என்ற சந்தேகத்தினையும் எழுகிறது.

இவ்வாறான வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்கையில்ரூபவ் மத்திய கிழக்கு ஆசியாவில், சிரிய அரசபடைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணியும்ரூபவ் அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ அமைப்பு 2013இற்கு பின்னரான காலத்தில் வலுப்பெற ஆரம்பித்தது.

ரூடவ்ராக் மற்றும் சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வலுவாக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போயிருந்த நிலையில் தலிபான் இயக்கங்களில் இருந்து பிரிந்துவந்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஹபீஸ் ஷைட் என்பவரது தலைமையில் தெற்காசியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினை காலூன்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ். கோரசோன்’ என்ற பெரியரிலே தெற்காசியாவில் செயற்பட முனைவதாகவும் அமெரிக்க உளவுத்துறை கருதுகின்றது.

அதேநேரம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் சுமார் 150 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததன் காரணமாக ஹபீஸ் ஷைட்டை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடந்த முதலாம் திகதியன்று அறிவித்திருந்ததோடு தெற்காசிய நாடுகளில் தலைதூக்கி வருவதாக நம்பப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கிளைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை 15ஆம் திகதி புதனன்று தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்தியாவின் காஷ்மீரில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாக ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ள நிலையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் குறித்த அச்சமும் அதிர்ச்சியும் பாதுகாப்புத்துறைக்கு ஏற்படாமலில்லை.

இப்பின்னணியில் தெற்காசியாவின் முதன்மை நாடான இந்தியாவிலும்ரூபவ் கேந்திர நாடான இலங்கையிலும் தீவிரவாதம் குறித்த அச்சநிலை தோற்றம்பெற்றுள்ளது. ஏந்த நாட்டிலிருந்து எந்த நாட்டுக்கு தீவிரவாதம் பரவுகின்றது என்று ஐயங்கொள்ளும் நிலைமையும் மையங்கொண்டுள்ளது. இத்தகைய தருணத்தில் இந்துசமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்புக்கே’ முதன்மை தானம் வழங்கப்பட வேண்டியநிலை ஏற்படுகின்றது. அதுகுறித்த தீர்க்கமான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்றது.

அரசியல் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு உறுதித்தன்மை உள்ளிட்ட கொள்கை வகுப்புக்களும் கூட்டுப்பொறிமுறை சார் செயற்பாடுகளும் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சார்க் கட்டமைப்பினை சீர்தூக்கி நிறுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அதனைவிடுத்து விரல் சுட்டுக்களும் பரஸ்பர கருத்தாடல்களும் பிராந்தியத்தின் பாதுகாப்பை என்றுமே உறுதிப்படுத்தப்போவதில்லை என்பது கண்கூடு.

ஆர்.ராம்