ஆசிய நாடுகளில் முதல் முறையாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமண செய்வதற்கு தைவான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் 24ம் திகதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. தற்போதைய நவீன உலகில், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. 

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில்  ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் ஏற்கனவே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தைவானிலும் ஓரின சேர்க்கையாளர்கள் பெருமளவில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் அங்கும் புற்றீசல் போல் ஓரின சேர்க்கையாளர்களின் சங்கங்கள், அமைப்புகள் பல தோன்றி அவர்களின் உரிமைக்காக ஆண்டு தோறும் பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்காதது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும்’ என்று கடந்த 2017ம் ஆண்டு அரசை எச்சரித்த தைவான் உச்ச நீதிமன்றம் அதனை அங்கீகரிக்க அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.