நிலவு படிப்படியாகச் சுருங்கி வருவதாக Nature Geoscience என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for moon

நிலவின் மேற்பரப்பில் சுருக்கங்கள் காணப்படுவதாகவும், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA வெளியிட்ட ஒளிப்படத்தை ஆய்வு செய்ததன் மூலம் அது அறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலவில் டெக்டானிக் தட்டுகள் இல்லை எனவும், எனினும் அங்கு டெக்டானிக் செயற்பாடு உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவு உருவானது. அன்று முதல் நிலவு வெப்பத்தை மெதுவாக இழந்து வருகிறது.

இதன் காரணமாக நிலவின் மேற்பரப்பு சுருங்கியுள்ளதாக குறித்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.