நடைபெறவிருக்கும் மேதின கூட்டமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் என்ற ரீதியில் தொடர்ந்தும் அரசியல் பயணத்தில் பயணிப்பதா அல்லது இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கும் இறுதி சந்தர்ப்பமாக மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரைச் சார்ந்த உறுப்பினர்களுக்கும் அமையும் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு சமூகமளிக்காதவர்கள் கட்சியினை விட்டு விலகியவர்களாகவே கருதப்படுவதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார்.

மேதின கூட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் கட்சிகளும் ஊழிய சங்கங்களும் ஏட்டிக்கு போட்டியாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மேதின கூட்டம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

(எஸ்.ரவிசான்)